'ரஜினி சார் என்னை மூணு தடவை அடிச்சுட்டாரு', - மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி
பிரபல நடிகை விஜயசாந்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் விஜயசாந்தி. இவருடைய படங்கள் எல்லாமே அதிரடி, ஆக்சன் தான். அது மட்டுமில்லாமல் ஒரு நடிகை இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இறங்குவார் என்பதை அவர் படத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் விஜயசாந்தி தன் நடிப்பு திறமைக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார். மேலும், இவர் ரஜினி, கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்தவர். பின் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் விஜயசாந்தி களமிறங்கினார். சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ' Sarileru Neekevvaru' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விஜயசாந்தி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
விஜயசாந்தி பேட்டி:
அதில், 'மன்னன்' படத்தில் ரஜினி சார் தான் இந்த கேரக்டர் ரொம்ப நல்ல இருக்கும் கண்டிப்பா நீங்க பண்ணனும் என்று சொன்னாரு. இல்ல சார் எனக்கு டேட்ஸ் இல்லை என்று சொன்னேன். அதற்கு அவர் ஒரு டைம் கதை கேளுங்க என்று சொன்னார். சரி ஓகேன்னு சொன்ன உடனே பி வாசு சார் வந்து எனக்கு கதை சொன்னாரு. கதை ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், ரஜினி சாரை ஓங்கி அடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதனால், அந்த சீன் மட்டும் வேண்டாம் என்று சொன்னேன். இல்லை அது ரொம்ப முக்கியமான சீன் கண்டிப்பாக பண்ண வேண்டும் என்று பி . வாசு சார் சொன்னார்.
https://www.youtube.com/watch?v=hmWHt0VduFg&t=459s
மன்னன் படம் குறித்து:
அதற்கு நான், ரஜினி சார் பெரிய ஹீரோ அவரை போய் எப்படி நான் அடிப்பது, அந்த சீன் வேண்டாம் சார் என்று சொன்னேன். அதனால், அந்த படத்தையே பண்ண வேண்டாம் என்று சொன்னேன். அதற்குப் பிறகு ரஜினி சார் போன் பண்ணி, இல்லை படம் நல்லா இருக்கும் பண்ணுங்க என்று சொன்னாரு. ஆக மொத்தத்துல என்னை ஏதோ பண்ண போறீங்க என்று நினைத்துக் கொண்டு அந்த படத்தை பண்ணேன். அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்டுல போய் கூட அந்த சீனை கண்டிப்பா எடுக்க வேண்டுமா என்று கேட்டேன். அதற்கு ரஜினி சார் உங்களால் மட்டும் தான் அதை பண்ண முடியும் நல்லா இருக்கும் என்று சொன்னாரு.
ரஜினி சார் மூணு தடவை அடிச்சாரு:
மேலும், ரஜினி சார் இந்த விஷயத்தை நூறாவது நாள் விழாவில் கூட சொல்லி இருப்பாரு. அப்புறம் படமும் ரொம்ப நல்லா ஹிட் ஆச்சு. எனக்கு இன்னமும் மனசுல அந்த சீன் பண்ணாம இருந்திருக்கலாமே என்று எண்ணம் வரும். ஆனால், அந்தப் படத்தில் நான் ரஜினி சாரை ஒரு தடவை தான் அடிப்பேன். அவரு என்னை மூணு தடவை அடிப்பாரு. அப்போ நான், நான் ஒருவாட்டி தானே அடிச்சேன் நீங்க எதுக்கு என்னை மூணு தடவை அடிச்சீங்க என்று நினைப்பேன். பெண்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்று படங்களில் சொல்விங்களே, இதுல மரியாதை எங்க இருக்கு என்று அவரிடம் கேட்டிருக்கிறேன்.
ஒரு கோடி சம்பளம் வாங்கினேன்:
மேலும், 90ஸ் காலகட்டங்களில் அதிக சம்பளம் வாங்கின நடிகர்களில் நானும் ஒருவர். 'மன்னன்' படத்துல நான் நடிச்சப்ப ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களில் அமிதாப் பச்சன் சார் முதலிடம், ரஜினி சார் இரண்டாவது இடத்திலயும், நான் மூன்றாவது இடத்திலயும் இருந்தோம். நான் அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு வேலை செய்து இருக்கிறேன். நான் இதெல்லாம் நடந்ததுக்காக கடவுளுக்கும் மக்களுக்கும் தான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் ரொம்ப லக்கி என்று தான் நினைக்கிறேன் என்று பெருமையோடு கூறியுள்ளார்.