தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். சாதிப்பதற்கு நிறமோ, அழகோ தேவையில்லை என்பதை சாதித்து காட்டியவர் விஜயகாந்த். மேலும், தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ரஜினி-கமல் என இருவருக்கும் மத்தியில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். அதோடு ரஜினி, கமல் ஆகியோருக்கு டப் கொடுக்கும் அளவிற்கு படங்களை கொடுத்தவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.

Advertisement

விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்:

அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அரசியலால் இவரால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது. பின் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்காக இவர் வெளிநாடுகளில் எல்லாம் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரால் முன்பு போல் பேசவும் நடக்கவும் முடியாமல் போனது. இப்படியாக சில வருடங்களாக அமெரிக்காவில் மருத்துவம், ஓய்வு என விஜயகாந்த் வாழ்க்கையே முடங்கிவிட்டது. சில காலம் விஜயகாந்த் குறித்து எந்த தகவலும் சோசியல் மீடியாவில் வெளிவராது இருந்தது.

விஜயகாந்த்தின் நலன் கருதி ரஜினி செய்தது:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கேப்டனின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் கேப்டனின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன்னா, ஒரு காலத்தில் சிங்கம் போன்று கம்பீரமாக இருந்த மனிதர் தற்போது இப்படி ஆகிவிட்டாரே! என்று கவலைப்பட்டு வருகின்றனர். இதனால் சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்கள் விஜயகாந்த்தை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து இருந்தார். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.

Advertisement

விஜயகாந்த் பெயர் வர காரணம்:

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கும் விஜய்காந்துக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜன். இது பலருக்கும் தெரிந்ததே. ஆனால், விஜயகாந்த் சினிமாவில் நிலைத்து நிற்க பிரபல இயக்குனர் எம் ஏ ராஜா அவர்கள் விஜயராஜன் என்ற பெயரை ரஜினிகாந்த் போல் இருக்க விஜயகாந்த் என்று மாற்றினார். இதற்கு பிறகுதான் விஜயகாந்த் உடைய படங்கள் எல்லாம் மாபெரும் ஹிட்டடித்தது என்று சொல்லலாம். இதனாலேயே ரஜினிகாந்த் மீது விஜயகாந்த் அளவு கடந்த அன்பை கொண்டு இருந்தார்.

Advertisement

ரஜினிக்காக விஜயகாந்த் செய்த செயல்:

அப்படி ஒரு முறை, நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது விழா ஒன்றில் கலந்து கொள்ள ரஜினியை நேரில் சென்று அழைத்திருந்தார். அப்போது ரஜினியின் முன்பு விஜயகாந்த தரையில் அமர்ந்தார். இதனை பார்த்த ரஜினி பதறிப்போய் ‘என்ன விஜி இப்படி பண்றீங்க?’ என்று கேட்டார். அந்த அளவிற்கு ரஜினியின் மீது அதிக மரியாதை கொண்டவர் விஜயகாந்த். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேபோல் ரஜினிகாந்தும் விஜய்காந்தின் மீது அதிக மரியாதை,அன்பும் கொண்டவர். அவருடைய உடல்நலம் குறித்து அடிக்கடி அக்கறை கொண்டு ரஜினிகாந்த் விசாரித்து வருகிறார்.

Advertisement