தனது மகள் விளையாடும் அழகை ஓரமாக நின்று ரசிக்கும் தளபதி விஜய். குயூட் வீடியோ.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம்,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர் .
https://twitter.com/AmmuSiva0929/status/969925328561848320
இளைய தளபதி விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒரு ரொமான்டிக் ஜோடியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
விஜய்யின் மகனான சஞ்சய் மற்றும் மகளான திவ்யா ஷாஷா இருவருமே விஜய் படத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் தஞ்சை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் தோன்றியிருந்தார். அதேபோல விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி இருந்தார். மேலும், விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். மேலும், இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை. இந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை கூட வாங்கியிருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் திவ்யா ஷாஷா பேட்மிட்டன் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் தனது மகள் விளையாடும் அழகை நடந்தபடி வேடிக்கை பார்க்கிறார் விஜய். இதோ அந்த அழகிய வீடியோ.