விஜய் ஒரு விஷ வலைல மாட்டிட்டு இருக்காரு - அவருக்கு நல்லதுதா பண்ற. எஸ் ஏ சி பகீர் பேட்டி

By Rajkumar · 7/11/2020

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இதில் விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறி இருப்பதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி மிகவும் வைரலாக பரவியது. அதுமட்டுமல்லாது இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.

https://www.youtube.com/watch?v=aoedrtpmHUE&feature=youtu.be

இந்த தகவல் வெளியான சிறிது நேர்த்திலேயே நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தந்தை கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்ததும் இல்லை என்றும், தனது தந்தை ஆரம்பித்த கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என்றும் கூறியிருந்தார். மேலும் தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விளம்பரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய்யின் தாயார் ஷோபா, அரசியல் பேச வேண்டாம் என பலமுறை கூறியும் எஸ்ஏசி கேட்காததால் அவரிடம் விஜய் பேசுவதில்லை என்றும், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் என்றும் கட்சி தொடங்குவதற்காக இரண்டாவது முறை கையெழுத்து கேட்டபோது நான் கையெழுத்துப் போடவில்லை என்றும் அது மட்டுமல்லாது கட்சியிலிருந்து விலகி விட்டதாகவும் கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=DK6MpCbVGG0

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ் ஏ சி பேசுகையில், விஜய்யும் நானும் ஒரு அப்பா மகன் எந்த அளவிற்கு பேசுனுமோ அந்த அளவுக்கு தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். திடீரென்று சண்ட கூட வரும். எந்த குடும்பத்தில் அப்பா மகனுக்கு சண்ட வரமா இருந்திருக்கு. ஆனால், எப்படா இப்படி பிரச்னை வரும் அத ஊதி பெருசாக்கிடலாம்னு பாத்துட்டு இருந்தா எப்படி. உங்களுக்கு எல்லாம் தெரியாத ரகசியம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அது உடையும் போது விஜய்க்கு எல்லா உண்மையும் புரியும். விஜய் ஒரு விஷ வலைல மாட்டிக்கொண்டு இருக்கிறார் அவரை நான் வெளியில் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார். மேலும், விஜய் தன்னுடைய பெயரை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியது பற்றி கேட்ட போது அவரு எடுத்தால் எடுக்கட்டும் என்ன ஜெயிலுக்கு அனுப்பனும்னா அனுப்பட்டும் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full