வெளியானது மாஸ்டர் படத்தின் அதிகாரபூர்வ டீசர் அப்டேட். உற்சாகத்தில் ரசிகர்கள்.

By Rajkumar · 12/11/2020

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது 'சூரரை போற்று' படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் நேற்று (நவம்பர் 12 ) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது.

https://twitter.com/XBFilmCreators/status/1326776110449876992

தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக 'சூரரைப் போற்று' அமைந்துள்ளது. அதே போல மாஸ்டர் திரைப்படமும் OTTயில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருந்தனர்.தற்போது தமிழகத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1122 தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அறிவித்தது.

இதனால் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியகாது என்று படக் குழுவினர் அறிவித்து இருந்தனர். முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டள்ளது. எனவே, மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படங்களுக்கு 50 சதவீத ரசிகர்கள் மட்டும் படம் பார்க்க வந்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

https://twitter.com/Dir_Lokesh/status/1326864862333464576

சரி, தீபாவளிக்கு படம் தான் வெளியாகவில்லை, தீபாவளிக்கு டீசராவது வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதை தொடர்ந்து ட்விட்டரில் #அப்டேட் குடுங்க லோகி என்ற ஹேஷ் டேக் கூட ட்ரெண்ட் ஆனது. இப்படி ஒரு நிலையில் இன்று (அக்டோபர் 12) மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்த நிலையில் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full