நீங்க வரக் கூடாது, வரக் கூடாது - கோவிலில் டென்ஷனாகி கத்திய விஜய்யின் தாயார் ஷோபா

By subhashini · 30/5/2024

கோயிலுக்குள் உள்ளே வராதீங்க என்று விஜயின் அம்மா கத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இவர் தான் விஜய்யை இயக்குனர் சினிமாவில் அறிமுகம் செய்தார். இவருடைய மனைவி, விஜய்யின் தாய் ஷோபா. மேலும், சமீபத்தில் இருவருமே காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள்.

இவர்கள் சுவாமி தரிசனம் செய்து முடித்து வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவர்களை பின் தொடர்ந்து இருக்கிறார்கள். அதை பார்த்த விஜயின் அம்மா சோபா, உள்ளே வராதீங்க! நீங்க இங்க வரக்கூடாது! என்று கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதற்குப் பிறகு எஸ் சி சந்திரசேகரை செய்தியாளர்கள் பேட்டி எடுத்திருக்கிறார்கள்.

விஜய் தாய் சோபா வீடியோ:

அப்போது விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு, என்னுடைய மகன் கட்சி ஆரம்பித்தற்கு என்னுடைய வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் எப்போதுமே இருக்கும் என்று கூறி இருந்தார். மேலும், விஜய் தாய் சோபா அவர்கள் பாடகர், எழுத்தாளர் மற்றும் நடிகை என பன்முகங்களை கொண்டவர். இவர் பல படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்றுதான். விஜய்யின் தாய் ஷோபா தொடக்கத்தில் மெல்லிசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தார்.

சோபா திரைப்பயணம்:

பின்னர் “மலர்கள்” படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஒரு மகாராஜா, ஒரு மகாராணி பாடலை, எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய அவள் ஒரு பச்சை குழந்தை படத்தில் ஒரு பாடலை பாடினார் சோபா. அதை தொடர்ந்து இவர் தன்னுடைய கணவர் எஸ் ஏ சந்திரசேகரின் பல படங்களில் பாடல்களை பாடினார். மேலும் இவர் ஆன்மீக பாடல்களையும் படியுள்ளார். அதேபோல தன்னுடைய கணவர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” படத்தில் ஷோபா தான் கதை எழுதியிருந்தார்.

சோபா குறித்த தகவல்:

இப்படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து திரைத்துறையில் இவர்களை அறிமுகப்படுத்தியது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த படம் 100 நாட்களுக்கு மேலே ஓடி சாதனை படைத்தது. சட்டம் ஒரு இருட்டறைக்கு பின்னர் விஜய் அறிமுக “நாளைய தீர்ப்பு” என பல படங்களை அவருடைய தாய் ஷோபா கதை எழுதி இருக்கிறார். அதன் பின் இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் அதிக வசூல் சாதனையும் பெற்றிருந்தது.

விஜய் திரைப்பயணம்:

இதனை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அவர்கள் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் இவருடைய கடைசி படம் என்றும் விஜய் கூறியிருந்தார். அதற்கு பிறகு இவர் தன்னுடைய கட்சியில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். தற்போது கட்சியின் பணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full