தெறி படத்தில் கைக் குழந்தையாக வந்த பாப்பாவா இது ? தற்போது எப்படி இருக்கார் பாருங்க.

By Rajkumar · 24/12/2019

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த்து வருகிறார். நடிகர் விஜய் எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தது ஒரு சில படங்களில் மட்டும் தான். அதிலும் அட்லீ, விஜய்யை வைத்து எடுத்து மூன்று படங்களிலும் நடிகர் விஜய் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அட்லீ இதுவரை விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை எடுத்துள்ளார். சமீபத்தில் வந்த பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான 'தெறி 'திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். மேலும், ராதிகா, மஹிந்திரன், மொட்ட ராஜேந்திரன் என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தார்னர். அதே போல இந்த படத்தில் விஜய்யின் மகள்களாக பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகாவும், விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்திருந்தனர்.

அதே போல இந்த படத்தில் அதேபோல விஜய் மற்றும் சமந்தாவின் பிளாஷ்பேக் காட்சியில் பெண் குழந்தை பிறப்பது போல சில காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். இந்த படத்தின் மூலம் மீனா மகள் பேபி நைனிகா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். ஆனால், இந்த படத்தில் கைக் குழந்தையாக நடித்த அந்த குழந்தை யார் என்று தெரியாத நிலையில், தற்போது அவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அவருக்கு 4 வயது ஆகின்றதாம்.

தற்போது விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் சசி குமாரின் மனைவியாக நடித்த மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஸ்ரீமன், கைதி படத்தின் அர்ஜுன் தாஸ் பலர் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full