ஜல்லிக்கட்டை ஆதரித்து விஜய் வெளியிட்ட வீடியோவை தற்போது கொண்டாடும் ரசிகர்கள். காரணம் ஏன் தெரியுமா ?
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டுமென 'பீட்டா' என்கிற அமைப்பு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டின் மீதான தடையை நீக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் பின் புரட்சியாக வெடித்தது. இதற்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவும் கொடுத்தனர். மேலும், பல பிரபலங்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களுடைய பல்வேறு முயற்சிகளை செய்தனர்.
https://twitter.com/HBK_Memes/status/1227783429472710657
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் எரிமலை போல் வெடித்தது. ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக ராகவா லாரன்ஸ், ஹிப்ஹாப் ஆதி, ஜிவி பிரகாஷ், சூர்யா, விஜய், ஆர் ஜே பாலாஜி, கார்த்தி என்று பல நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். அந்த வகையில் தளபதி விஜய்யும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பது, உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது நம்முடைய கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்க தான். பறிப்பதற்கு இல்லை.தமிழருடைய அடையாளமே ஜல்லிகட்டு தான். எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதல் இல்லாமல், எந்த ஒரு கட்சி பேதமின்றி தமிழன் என்ற ஒரே உணர்வோடு இந்த போராட்டத்தில் குதித்த அனைத்து இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தால் நான் சந்தோஷமாக இருக்ப்பேன்.
https://twitter.com/AllYGirL85/status/1227780480939855872
இந்த பிரச்சனைக்கு காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்பிட்ட தமிழ்நாடே சந்தோஷப்படும் என்று பேசி இருந்தார். இந்த வீடியோவை தளபதி விஜய் அவர்கள் ஜனவரி மாதம் 17ம் தேதி 2017 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகின்றது. தற்போது இந்த வீடியோவை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளார்கள். இதனை தளபதியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டிங் ஆகி கொண்டாடி வருகிறார்கள்.