மெர்சல் பட பாடல் வரிகளை பாடி ஸ்டெர்லைட் துப்பிக்கி சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் சேதுபதி

By Ajju · 23/5/2018
தமிழகத்தில் நேற்று தூத்துக்குடியில் நடந்த கொடூரமான சம்பவத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 11 உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். [embed] https://twitter.com/i_vijaysethu/status/998934314791272449[/embed] பல விஷயங்களுக்கு வாய் திறக்காத நடிகர்கள் கூட இந்த கொடுரமான தாக்குதகுக்கு ட்விட்டரில் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். சேதுபதி:- சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/ பாதுகாப்புக்காக வேண்டியே. அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால எதற்கு ஒரு அரசாங்கம் ? நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே.என்று பதிவிட்டுள்ளார். பல்வேறு பொது மக்களும், அரசியல் பிரபலங்களும் இந்த சம்பவத்ங்கிற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். தங்களது உரிமைக்காக போராடினால் அநியாயமாக கொல்லப்படுவார்கள் என்று இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை. இதுகிறித்து தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full