பிக் பாஸ் விக்கல்ஸ் விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட், வெளியான சூப்பர் அப்டேட் - என்ன தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் விக்கல் விக்ரம். இவர் ஸ்டாண்ட்-அப் காமெடியனாக தமிழ் மக்கள் மத்தியில் பரிச்சயமாக இருந்தார். அதனை தொடர்ந்து இவர் youtube யிலும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவருடைய வீடியோக்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதன்பின் இவர் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தார். அந்த பிரபலத்தினால் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களும் நல்ல விஷயங்களும் நடந்திருக்கிறது. அந்த வகையில் விக்ரம் விக்கல்ஸுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தற்போது விக்ரமுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லைட் வெயிட் பேபி என்ற படத்தில் தான் விக்ரம் நடிக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் விக்ரம், ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. ஆனால், அதெல்லாம் தாண்டி ரொம்ப பயமாகவும் இருக்கிறது.
ஹீரோவாகும் விக்ரம்:
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். அதற்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது. அதெல்லாம் யோசிக்கும் போது தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அது ஏற்படுத்தி தருகிற வாய்ப்புகள் பற்றி நிறைய கருத்து இருக்கும். அது அவர்களை பொறுத்தது. லைஃப் எப்போதுமே மாறி கொண்டே தான் இருக்கும். இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு பிக் பாஸ் ஒரு காரணம் தான். இந்த படத்துக்கு நான் வசனகர்த்தாகவும் இருக்கிறேன்.
விக்ரம் பேட்டி:
இந்த படத்தின் இயக்குனர் பெங்களூரை சேர்ந்தவர். அதனால் தமிழ் வசனங்களை நான் தான் எழுதுகிறேன். இந்த படத்தில் முதன்மை கேரக்டரும் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருப்பவன் தான். என்னுடைய அனுபவங்களையும் இதில் சேர்க்க முடிந்தது. ஸ்டாண்ட் அப் காமெடியனாக நினைக்கும் ஒருவனை பற்றிய கதைதான் இந்த படம். எப்போதுமே ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் ஒரு விதமான எனர்ஜி இருக்கும்.. ஒவ்வொரு இயக்குனரிடமிருந்தும் நாம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வோம். இதுவரைக்கும் என்னுடைய படங்களில் தீவிர நடிப்பை வெளிப்படுத்துகிற மாதிரியான கதாபாத்திரங்கள் அமையவில்லை.
https://www.youtube.com/watch?v=_JVJSQTJpTc
படம் பற்றி சொன்னது:
இதுதான் எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு. இந்த படத்தில் என்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காமெடியோடு இந்த படத்தில் சென்டிமென்ட் மாதிரியான விஷயங்களும் இருக்கிறது. அதே போல் உடற்பயிற்சி செய்து ஒல்லியாகி கஷ்டப்படுகிற மாதிரியான கதாபாத்திரம் எல்லாம் எனக்கு இல்லை. எங்களுடைய வீடியோக்களுக்கு அத்தனை வேலைகளும் நாங்க தான் பார்ப்போம். அந்த மாதிரி தான் இந்த படத்துக்கும் ஆர்வத்தோடும் ஆசையோடும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்ப வரைக்கும் அத்தனை வேலைகளையும் சிறப்பாக முடித்திருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.