விக்ரம் ட்ரைலரில் வரும் இந்த நடிகை யார் தெரியுமா ? அட, மிஸ்கின் படத்தில் கூட நடிச்சிருக்காரே.

By subhashini · 18/5/2022

கமலின் விக்ரம் படத்தில் நடித்த நடிகையை ஜிம் பயிற்சியாளர் சராமாரியாக குத்தும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங் ஸ்டாராக மிரட்டி இருக்கிறார்.

விக்ரம் படம் பற்றிய தகவல்:

ஜெயிலில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் முயற்சி செய்கிறார். இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க போராடுகிறார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

படத்தின் ட்ரைலர் வெளியீடு:

அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நடிகை சுவஸ்திகா திரைப்பயணம்:

மேலும், இந்த படத்தில் சின்னத்திரை பிரபலங்களான ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் நடிகை சுவஸ்திகா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ட்ரைலரிலும் இவரது காட்சிகள் இருந்தது. ஏற்கனவே இவர் மிஸ்கின் நடித்த சவரக்கத்தி, ஜீவாவின் கீ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் கமலின் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார்.

நடிகை சுவஸ்திகா வீடியோ:

இந்த நிலையில் நடிகை சுவஸ்திகா வயிற்றில் ஜிம் பயிற்சியாளர் குத்தும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், நடிகை சுவஸ்திகா அவர்கள் ஜிம் பயிற்சியாளர் உடன் ஆவேசமாக சண்டை போடுகிறார். பின் பயிற்சியாளர் நடிகை ஸ்வஸ்திகா வயிற்றில் சராமாரியாக குத்துகிறார். இந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full