துருவநட்சத்திரமும் இல்லை பிதாமகனும் இல்லை.! விக்ரம் - சிம்ரன் ஜோடியாக நடித்த படம் தெரியுமா.!

By Rajkumar · 27/1/2019

தமிழ் சினிமாவில் சீயான் விக்ரம் கடந்த பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு மாபெரும் அங்கிகாரம் கொடுத்ததே பாலா இயக்கத்தில் வெளியான 'சேது' படம் தான். விக்ரம் இதுவரை தமிழ் சினிமாவின் பல முன்னணி கதாநாயகிகளுடன் நடித்து விட்டார்.

ஆனால், 90 ஸ் காலகட்டத்தின் லேடி சூப்பர் ஸ்டாரான சிம்ரனனுடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடித்தது இல்லை. விக்ரம் நடித்த பிதாமகன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் சிம்ரன். தற்போது சிம்ரனுடன் இனைந்து 'துருவநட்சத்திரம் ' படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தெலுகு படத்தில் நடித்துள்ளனர். எம். சுப்பையா என்பவரது இயக்கியத்தில் வெளியான இந்த படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. சிம்ரன், ரம்யா கிரிஷ்ணன் நடித்த இந்த படத்தை பத்மாவாதி என்பவர்தயாரித்திருந்தார் இருந்தார்.

இந்த படம் தெலுகு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகி இருந்தது. இதில் கவனிக்கபட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த படத்தின் பெயர் 'மாரி' தான். இதே தலைப்பில் நடிகர் தனுஷ் மாரி மற்றும் மாரி 2 என்று இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full