காலைல 7.30க்கு குதிரையில ஏறி மாலை 5.30 மணி வரை - விக்ரமின் டெடிகேஷன் குறித்து சொன்ன நிழல்கள் ரவி.

By Siva · 10/7/2022

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய நடிப்பிற்கு தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : Tattoo முதல் Evil சிரிப்பு வரை சூர்யாவிற்கும் கமலின் இந்த படத்தின் Referenceஐ பயன்படுத்தியுள்ள லோக்கி. (அதுவும் Climax காட்சி தான்)

கோப்ரா படம்:

நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார் என்று கூறபடுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகி வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன்:

இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

படத்தின் டீசர்:

இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும், டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விக்ரம் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் விக்ரம் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மாலை இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் விக்ரம் பங்கு:

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் பங்கு குறித்த நிழல்கள் ரவி சொன்ன விஷயம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் விக்ரம் அவர்கள் ஆதித்த கரிகாலன் என்ற ரோலில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்காக அதிகமான மெனகெடல்களை செய்திருக்கிறார் விக்ரம். அதாவது, படத்தின் சூட்டிங் போது அவர் ஒரு நாள் காலை 7.30 மணிக்கு குதிரை மீது ஏறி தொடர்ந்து டயலாக் பேசி இருக்கிறார். பின் அவர் கீழே இறங்கும் போது மாலை 5 மணி ஆகிவிட்டது. அந்த அளவிற்கு டெடிகேட்டர் ஆனவர். இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இப்படிப்பட்ட கலைஞர் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது ரசிகர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full