மண்ணுக்குள் சிக்கி தவிக்கும் வயநாடு மக்களின் அவல நிலை, நடிகர் விக்ரம் என்ன செய்து இருக்கிறார் தெரியுமா?

By subhashini · 1/8/2024

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விக்ரம் செய்து இருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் வயல் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்த செய்தி தான் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த பருவ மழையால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்தது.

அந்த வகையில் நேற்று அதிகாலை வயநாட்டில் அதிக கனமழை பெய்ததால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் பல பேர் சிக்கி இருக்கிறார்கள். இந்த மோசமான திடீர் நிலச்சரிவில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு 200 குடும்பங்கள் மண்ணில் புதைக்கப்பட்டும், 1000 பேர் மண்ணுக்குள் புதைந்து இருக்கிறார்கள். இந்த கோர சம்பவம் சம்பவம் அறிந்து மீட்பு பணிகள் விரைவாகவே வந்து மண்ணில் சிக்கி புதைந்திருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

நிலச்சரிவு சம்பவம்:

மேலும், மீட்கப்பட்ட பல பேரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையும் கொடுத்து வருகிறார்கள்.
இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, கேரளா முதலமைச்சர் ஆகியோர் உயிர் இழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அதோடு மக்களை மீட்கும் பணியில் மத்திய அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

பிரபலங்கள் இரங்கல்:

இன்னொரு பக்கம், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்களும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கப் போராடி இருந்தார்கள். பிரதமர் மோடி அவர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50,000 இழப்பீடு தருவதாகவும் அறிவித்திருக்கிறார். இதை அடுத்து ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களுக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.

விக்ரம் செய்த உதவி:

இந்நிலையில் வயநாடு மக்களுக்காக நடிகர் விக்ரம் செய்து இருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்ரம் அவர்கள் கேரளாவில் வயநாடு மக்களுக்காக பேரிடர் நிவாரண நிதியாக 20 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார்.

நிகிலா விமல் செய்த உதவி:

அதேபோல் பிரபல நடிகை நிகிலா விமல் அவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து நிவாரணங்களை வழங்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இப்படி பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full