selfie கேட்ட தமிழ் ரசிகரை தடுத்த மும்பை பாடிகார்ட் - விக்ரம் செய்த செயல். வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 1/5/2023

பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பார்த்திபன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சில தினங்களுக்கு முன்பு தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பார்த்து பிரபலங்கள் ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வந்தார்கள். அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=StgRo3QjhIg

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் ப்ரோமோஷன்கள் படு மும்மாரமாக நடைபெற்றது. இதற்காக விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா என்று பலர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று இந்த படத்தை விளம்பரப்படுத்தினர். இதில் எங்கு சென்றாலும் விக்ரம் தான் பலரையும் கவரும் வண்ணம் வித்யாசமான கெட்டப்பில் விதவிதமான உடைகளை அணிந்து சென்று show steal செய்தார்.

மேலும், இரண்டாம் பாகம் வெளியானத்தில் இருந்து விக்ரமின் கதாபாத்திரம் தான் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. தமிழில் மட்டுமல்லாது ஆதித்ய கரிகாலன் மூலம் வட இந்தியாவிலும் பிரபலமடைந்து இருக்கிறார் விக்ரம். அதிலும் குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா ஒன்றில் இந்திய கலாச்சாரம் குறித்து விக்ரம் பேசியது வட இந்திய ஊடகத்தில் பெரும் பிரபலமானது.

ரசிகரை நெகிழ வைத்த விக்ரம் :

இதனால் டெல்லி மும்பை போன்ற ஊர்களுக்கு பொன்னியின் செல்வன் படக்குழு சென்ற போது விக்ரமிற்கு மற்ற பொன்னியின் செல்வன் நடிகர்களை விட அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் நடிகர் விக்ரம் மணிரத்தினத்துடன் வந்திருந்தார். அங்கே அவருடன் தமிழர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்ற போது பாதுகாவலர் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை கண்ட விக்ரம் அவரை அழைத்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full