இவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு தெரியல - 'வீர தீர சூரன்' படத்தின் சீக்ரெட்ஸ் பகிர்ந்த நடிகர் விக்ரம்
வீர தீர சூரன் படம் தொடர்பாக நடிகர் விக்ரம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரையுலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக நடிகர் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஸ்டுடியோ ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
வீர தீர சூரன்:
இதை அடுத்து விக்ரம் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வரிசையில் தற்போது விக்ரம் அவர்கள் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை முன்னணி நட்சத்திர இயக்குனரான எஸ். யூ. அருண்குமார் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
மேலும், இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் இந்த மாதமே வருகிற 27ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் வீர தீர சூரன் படம் தொடர்பாக விக்ரமுடன் பட குழுவினர் இணைந்து பேட்டி அளித்திருக்கிறார்கள்.
விக்ரம் பேட்டி:
அப்போது விக்ரம், எஸ் ஜே சூர்யா ஒவ்வொரு படத்திலும் கலக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்று சொன்னார். ஆனால், அவருடைய முக்கியமான நடிப்பை இந்த படத்தில் பார்ப்பீர்கள். ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு வசனத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் அற்புதமாக நடித்திருக்கிறார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். நடிப்பு மட்டும் இல்லை அவர் டப்பிங்கிலும் ஒரு மான்ஸ்டர். அவர் பண்ற விஷயங்களும் மான்ஸ்டர் மாதிரி தான் இருக்கும்.
https://www.youtube.com/watch?v=bCq70fO8E-Q
படம் குறித்து சொன்னது:
அதேபோல் படத்துக்குள் சுராஜ் வந்தது எங்களுக்கு ரொம்ப பூஸ்ட் ஆக இருந்தது. படம் ரொம்ப ராவாக இருக்கப் போவதால் எல்லோருமே பர்பாமர்களாக இருக்கணும் என்று முன்கூட்டியே திட்டம் போட்டோம். முக்கியமாக எஸ்.ஜே சூர்யா வந்தது எங்களுக்கு பெரிய வரம் மாதிரி இருந்தது. இந்த படத்தை இருக்கிற அனைவரோட கதாபாத்திரமும் கிரே ஷேட்ல தான் இருக்கும். எல்லோருக்கும் ஒரு ஞாபகம் இருக்கு. இவங்க நல்லவங்களா கெட்டவங்களா என்று கிடையாது. தூஷரா விஜயன் கதாபாத்திரத்தை தவிர எங்களோட கதாபாத்திரம் ஒரு புள்ளியில் சுயநலமாக தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.