லியோ படத்துல விக்ரம்,மாஸ்டர் படத்துல நடிச்சவங்க எல்லாம் - Lcu ரகசியத்தை போட்டுடைத்த விக்ரம் பட நடிகர்.

By subhashini · 13/10/2023

லியோ எல்சியூ தான் என்ற ரகசியத்தை லோகேஷ் பட நடிகர் உடைத்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் வசூலில் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார்.

பின் இவர் சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார். பின் “மாநகரம்” என்ற படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ். இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

லியோ படம்:

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தட், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் என பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலரை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே லியோ படம் lcuவில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=54c7P3poF4A

லியோ எல்சியூ:

இது தொடர்பாக ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பினார்கள். ஆனால், படக்குழு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் மற்ற படங்களுடன் லியோவை ஒப்பிட்டு கனெக்ட் செய்து சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தார்கள். சமீபத்தில் கூட திரிஷா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அப்போது அவருடைய கையில் இருந்த தேள் டாட்டூவை பார்த்து பலருமே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா போட்ட டாட்டூ மாதிரி இருக்கிறது லியோ கண்டிப்பாக எல்சியூ தான் என்றெல்லாம் கூறி இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

லியோ குறித்து சொன்னது:

இந்த நிலையில் விக்ரம் படத்தில் நடித்த நடிகர் பேட்டி ஒன்றில், லியோ கண்டிப்பாக எல்சியூ தான். நான் விக்ரம் படத்தில் நடித்தேன். லியோ படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு சென்றபோது அவர் லியோ எல் சிவில் இருக்கிறது. இதனால் மற்ற படங்களில் நடித்த நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை. புது நடிகர்களை தான் அறிமுகம் செய்திருக்கிறோம். குறிப்பாக விக்ரம் படத்தில் நடித்த நடிகர்கள் இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை. தயவு செய்து தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்து லியோ எல் சி யு தான் என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full