நாயகன் மீண்டும் வரார் பாடல் எழுதியவர் மீது காதலி பரபரப்பு புகார். பின்னணி இதோ.

By Manikandan · 13/2/2023

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூலிலும் சாதனை படைத்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த திரைப்படமான விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இப்படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் ஒரு பாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் பல நடிகர்களை ஒரே திரையில் ஒன்றாக கானவும் வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். தற்போது கிடைத்துள்ள தகவலின் படி விக்ரம் படத்தில் நடித்த சில நடிகர்கள் தற்போது லியோ படத்துடன் இணைந்துள்ளார். அதே நேரத்தில் கமலஹாசனும் இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவார் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

லியோ ப்ரோமோ :

இந்நிலையில் லியோ படத்தின் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அந்த ப்ரோமோவில் விஜய் வாழ் தயாரித்த கொண்டிருக்க அவரை நோக்கி படையாக பல கார்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை நோக்கி சாக்கொலேட்டை சுவைத்தபடி விஜய் நிற்கிறார். இந்த ப்ரோமோ வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பலவிதமான படத்தை பற்றிய பலவிதமான கருத்துகள் கூறப்படுகிறது. குறிப்பாக காரில் வருவது சூர்யா என்றும் விஜய்யை சந்திக்கத்தான் அவர் வந்துகொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

போலீஸில் புகார் :

இப்படி ஒவ்வொரு படத்திலும் லோகேஷ் கனகராஜ் புதிய புதிய திருப்பங்களை ரசிகர்களுக்கு கொடுத்து அதிர்ச்சியாகி வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கிய சூப்பர் ஹிட் படங்களான விக்ரம், மாஸ்டர் போன்ற படங்களிலும் விஜய் நடித்த கத்தி படத்திலும் இணை இயக்குனராகவும், விக்ரம் படத்தில் வரும் போர் கண்ட சிங்கம், நாயகன் மீண்டும் வரார் பாடல்களை எழுதிய விஷ்ணு இடவன் மீது தான் தற்போது பெண் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

திருமணத்திற்கு மறுப்பு :

அதாவது விஷ்ணுவும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷ்ணு காதலித்த அந்த பெண் கர்ப்பமானதால் இருவீட்டாரும் திருமணம் செய்து கொள்ள வைக்க முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் விஷ்ணு , திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் சென்னை திருமங்கலம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full