தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார்.

அதனை தொடர்ந்து இவர் அஜித், விஜய், கமல், ரஜினி என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். அதோடு சமீபத்தில் வெளியாகி இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான், பீஸ்ட், விக்ரம் போன்ற படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இந்த படங்களில் எல்லாம் தன்னுடைய இசையில் பட்டையை கிளப்பி இருந்தார்.

Advertisement

அனிருத்தும் காபியும் :

பொதுவாக அனிருத் இசையமைத்தாலே அந்த பாடல் ஹிட் தான் என்றாலும் அது காபி சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையான ஒன்று தான். பேட்ட படம் வெளியான போது அந்த பாடல் சாமி பாடலில் இருந்து சுடப்பட்டது என்று சர்ச்சை எழுந்தது. அதே போல விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடல் அனிருத் இசையமைத்த Zomatto Ad போல இருந்ததும் என்றும் கூறி வந்தனர் என்பது குறிப்ட்டத்தக்கது.

மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் பாடல்கள் :

இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் அனிருத் காபி அடித்து தான் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி,சூர்யா என்று பலர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் தான் இசைமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்த்தும் மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisement

பத்தல பத்தல காபி சர்ச்சை :

அதிலும் குறிப்பாக விக்ரமின் தீம் சாங், பத்தல பத்தல போன்ற பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம் படத்தின் நாயகன் மீண்டும் வாரான் பாடலை பழைய விக்ரம் படத்தில் இருந்து பட்டி டிங்கரிங் செய்து அசத்தி இருந்தார் அனிருத். பத்தல பத்தல பாடல் வடிவேலு பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில் சுடப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பி இருந்தது.

Advertisement

‘Once Upon A Time’ :

பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் ஆங்கில வரிகளில் பாடல் இடம்பெறும் அந்த வகையில் விக்ரம் படத்திலும் ‘Once Upon A Time’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இந்த பாடலும் படத்தின் மாஸ் கட்சிகளுக்கு பலம் சேர்த்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இந்த ஆங்கில பாடலும் அனிருத் காபி அடித்து இருக்கிறார் என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதை நீங்களே கேளுங்க.

Advertisement