Vikram படத்தை ரோஸ்ட் செய்து Plip Plip வெளியிட்ட வீடியோ - பதிலுக்கு ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்கள்.

By Ajju · 12/6/2022

நாளுக்கு நாள் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது போல தமிழ் சினிமாக்களை விமர்சிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திரைப்படம் வெளியானால் அந்த படத்தின் விமர்சனம் வார இறுதியில் தான் தொலைக்காட்சியில் வரும் ஆனால், தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு படம் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே அந்த படத்தின் விமர்சனம் மட்டுமல்லாமல் அந்த பாடமே இணையத்தில் வெளியாகிவிடுகிறது.

https://www.youtube.com/watch?v=C2r_vQBFbiA&t=668s

தற்போது இருக்கும் காலகட்டத்தில் யூடுயூப் விமர்சகர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் தமிழ் யூடுயூப் சேனல்களில் 18 + என்று குறிக்கொண்டு ஆபாசமாக பேசி வீடியோகளை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் பிலிப் பிலிப் யூடுயூப் சேனல். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர்கள் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை ரோஸ்ட் செய்த் வீடியோ பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

பெரும் மகிழ்ச்சியில் கமல் :

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல்.

https://twitter.com/cinemapuram/status/1535667167684747264

Plip Plip விக்ரம் ரோஸ்ட் :

இதுவரை வந்த கமல் படங்களிலிலேயே அதி விரைவாக 200 கோடி வசூலை பெற்ற கமல் படமாக இந்த படம் அமைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதே போல பல விமர்சகர்களும் இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். அவ்வளவு ஏன் நல்ல படத்தை கூட கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை கூட இந்த படத்தை பெரிதாக கலாய்க்கவில்லை.

கேலி செய்யும் நெட்டிசன்கள் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பிலிப் பிலிப் சேனல் ரோஸ்ட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தை கேலி செய்த்தோடு மட்டுமல்லாமல் கமலின் நடிப்பையும் கேலி செய்து இருக்கின்றனர். பொதுவாக இவர்கள் ரோஸ்ட்டில் இருக்கும் காமெடிகள் ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கும் தான். ஆனால், இந்த படத்தின் ரோஸ்ட் வீடியோவை கண்டு நெட்டிசன்களே இவர்களை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

சர்ச்சையை கிளப்பிய அண்ணாத்த ரோஸ்ட் :

மேலும், நெஞ்சுக்கு நீதி படத்தை ஏன் ரோஸ்ட் செய்யவில்லை என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படம் வந்த போது அந்த படத்தை ரோஸ்ட் செய்து வீடியோ வெளியிட்டனர். அதில் அவர்கள் படத்தை விமர்சிப்பது மட்டுமில்லாமல் தேவை இல்லாமல் கெட்டவார்த்தைகளை பேசி ரஜினி, நயன்தாரா, கீர்த்தி என்று பலரை இழிவாக பேசி இருந்தனர். இதனால் சில விமர்சகர்களே இவர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

behindtalkies AMP · Quick view
View full