என் தாத்தா, அப்பாவால் நிறைய தனிமையை உணர்ந்தேன் - மேடையில் நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்

By subhashini · 16/3/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் உதவிஇயக்குனராக இருந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது.

இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி இருந்த படம் சிறை. இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் எல்கே அக்ஷய் குமார் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தை லலித் குமார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களுடைய கதையை வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.

சிறை படம்:

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய 75வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ரம் பிரபு, ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன் நிற்கும்போது என்னுடைய தாத்தா சிவாஜி கணேசன், அப்பா பிரபு வாங்கி இருந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற பயமும் பொறுப்பும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

விக்ரம் பிரபு சொன்னது:

நடிகரின் பேரன், மகன் என்ற சூழல் எப்போதுமே என்னை தாக்கி கொண்டு இருக்கும். இதனால் நான் ரொம்பவே தனிமையை உணர்ந்து இருக்கிறேன். சினிமா துறையின் உடைய வாரிசு நடிகர் என்பதாலுமே எனக்கு ஒரு தனி அடையாளம் கிடைக்கவில்லை. இதனால் நான் ரொம்பவே கவலைப்பட்டு இருக்கிறேன்.
நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று அப்பாவுடன் சொன்னபோது நான் உதவி செய்ய மாட்டேன்.

https://www.youtube.com/watch?v=e5AgI6p4I_0&vl=ru

சினிமாவில் பட்ட கஷ்டம்:

நீயே முயற்சி செய்து கொள் என்று சொன்னார். அதன்படி நான் இதுவரை 25 படம் நடித்திருக்கிறேன். எல்லா படங்களுக்கும் என்னுடைய சொந்த உழைப்பில் தான் முன்னேறி இருக்கிறேன். நல்ல கதைகளை மட்டும் தான் தேர்ந்தெடுத்து வருகிறேன். சிறை என்னுடைய 25 ஆவது படம். எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இன்னும் என்னுடைய உழைப்பை சினிமாவில் போட்டு எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full