ரஜினி சார் சொன்ன மாதிரி தான் சினிமாவில் இருக்கிறேன் - நடிகர் விக்ரம் பிரபு பகிர்ந்த விசயம்

By subhashini · 14/3/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் உதவிஇயக்குனராக இருந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது.

இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி இருந்த படம் சிறை. இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் எல்கே அக்ஷய் குமார் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தை லலித் குமார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களுடைய கதையை வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.

சிறை படம் :

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய 75வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ரம் பிரபு, ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்கும்போது தாத்தாவின் பெயரையும் அப்பாவின் பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் பயமும் எனக்குள் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=gr3Z_IM7btw

75வது நாள் கொண்டாட்டம்:

நடிகர் ரஜினிகாந்த் சார் சொன்னது போல காது கேட்காத தவளையாக சினிமாவில் பயணித்து வருகிறேன்.
கும்கியில் தொடங்கி சிறை வரை காது கேட்காத தவளையாகவே இருந்து வருகிறேன். வெற்றியும் தோல்வியும் சந்தித்து வருகிறேன். சினிமாவில் உள்ள அரசியல் தட்டியும் தூக்கியும் விடும். ஆசாமிகள் என எல்லா விஷயங்களையும் நான் கற்றுக் கொண்டுள்ளேன். 25 ஆண்டுகள் கடந்தும் இதுதான் ஆரம்பம் என்பது போல நகர்கிறேன்.

விக்ரம் பிரபு சொன்னது:

சினிமாவில் நான் உனக்கு உதவி எல்லாம் பண்ண மாட்டேன். நீயே தான் கற்றுக் கற்றுக் கொண்டு வர வேண்டும் என்று என்னுடைய அப்பா சொன்னார். அதற்கேற்ற மாதிரி தான் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். முதல் படத்தில் கும்கி யானையை பிடித்து சென்றது போல ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவின் கையை பிடித்து சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full