சிவகுமாரை தொடர்ந்து செல்பி சர்ச்சையில் சிக்கிய விக்ரம்.!வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 21/1/2019

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செல்பி எடுக்க வந்த நபரின் செல் போனை நடிகர் சிவகுமார் தட்டிவிட்ட வீடியோ ஒன்றும் பெரும் வைரலாக பேசப்பட்டது. தற்போது அதே போன்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=KW3CD6sr8Ug

சமீபத்தில் உடற்பயிச்சி கூடம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் நடிகர் விக்ரம். அப்போது ரசிகர் ஒருவர் விக்ரமுடன் செல்பி எடுக்க முயன்றபோது அவரை தடுத்து செல்பி எடுக்க மறுத்துவிட்டார் விக்ரம்.
இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த விடியோவை கண்ட அனைவரும் நடிகர் விக்ரமா இப்படி நடந்து கொண்டார் என்று ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், உண்மையில் சீயான் விக்ரம் அப்படிபட்ட ஆள் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழா ஒன்றில் பங்கேற்ற விக்ரமிடம் செல்பி எடுக்க வந்த ஒரு நபரை காவலர்கள் தடுத்த போது விக்ரமே அந்த நபரை அழைத்து செல்பி எடுத்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamil Behind Talkies AMP · Quick view
View full