கதய சொன்னேன், விக்ரம் கண்டுக்கவே இல்ல - குற்றம் சாட்டிய பிரபலஇயக்குனர், விக்ரம் கொடுத்த விளக்கம்.

By subhashini · 22/5/2023

இயக்குனர் அனுராக் காஷ்யப் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க மறுத்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக விளங்கி கொண்டு இருப்பவர் இயக்குனர் அனுராக் காஷ்யப். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் இமைக்கா நொடிகள். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

இந்த படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனுராக் காஷ்யப். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர். இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் சோக்டு என்ற வெப் சீரிஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.

கென்னடி படம்:

தற்போது இவர் இயக்கியிருக்கும் படம் கென்னடி. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ராகுல் பட் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக இயக்குனர் அனுராக் காஷ்யப் கலந்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது விக்ரம் தான்.

அனுராக் காஷ்யப் அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அனுராக் காஷ்யப் கூறியிருந்தது, இந்த படத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் நான் இந்த கதையை கூறினேன். அதற்கு விக்ரமின் ஒரிஜினல் பெயர் கென்னடி என்ற பெயரையே இந்த படத்திற்கும் டைட்டில் வைத்தேன்.

விக்ரம் குறித்து சொன்னது:

ஆனால், விக்ரமிடமிருந்து சரியான பதில் எதுவும் கிடைக்காததால் அவருக்கு பதிலாக நடிகர் ராகுல் பட்டை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்று கூறினார்.அவர்கள் இந்நிலையில் இது குறித்து நடிகர் விக்ரம் ட்விட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர்,அன்புடைய அனுராக் காஷ்யப், சமூக ஊடகங்களில் உள்ள நம் நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்காக ஒருவருடத்திற்கு முன் நடந்த உரையாடலை மீளாய்வு செய்கிறேன். இந்தப்படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு நான் பதிலளிக்கவில்லை என்றும் நண்பர் ஒருவர் மூலமாக அறிந்த உடன் உங்களை தொடர்புகொண்டு எனக்கு உங்களுடைய எந்த மெயிலும், மெசேஜூம் வரவில்லை என தெரிவித்தேன்.

https://twitter.com/chiyaan/status/1660597397494595584

மேலும் நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாற்றிவிட்டேன் என்றும் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதையும் விளக்கமளித்தேன். அந்த தொலைபேசி உரையாடலில் நான் சொன்னது போல, உங்களின் ‘கென்னடி’ படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். காரணம் அது என்னுடைய பெயரை கொண்டிருப்பதால். அன்புடன் கென்னடி என்ற சீயான் விக்ரம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full