'அவன் பாருக்கு போனான், இவன் போருக்கு போனான்' - தன்னை கவர்ந்த 'அவளை மறக்கத்தான்' memes குறித்து மேடையில் பேசிய விக்ரம்.

By subhashini · 17/4/2023

பொன்னியின் செல்வன் படம் குறித்து வரும் மீம்ஸ்க்கு சியான் விக்ரம் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார்.

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

பொன்னியின் செல்வன் படம் :

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சிம்பு, இயக்குனர் பாரதிராஜா, கமலஹாசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பட ப்ரோமோசனில் நடிகர்கள்:

அந்த வகையில் சமீபத்தில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி கலந்து கொண்டு இருந்தார். அப்போது மேடையில் விக்ரம் சொன்னது, திரிஷா சொன்னதை போல் தான் நானும் ஷூட்டிங்கில் இருந்து தான் வருகிறேன். ரஞ்சித் ப்ரோ உங்களை கேட்கிறார். காதல் தோல்வி என்றால் எல்லோரும் பாருக்கு போவார்கள்.

மீம்ஸ் குறித்து விக்ரம் சொன்னது:

ஆனால், இவரு வாருக்கு போகிறார் என்றெல்லாம் மீம்ஸ் போடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான் என்ற மீம்ஸ் பயங்கரமாக வைரலாகி வருகிறது. உண்மையாலுமே நான் ஒரு சூப் பாய் தான் என்று விக்ரம் தன் காதல் தோல்வி குறித்து கூறி இருக்கிறார். தற்போது அவர் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full