ஷாக்கிங் நியூஸ்.! வர்மா படத்தில் இருந்து விலகினார் பாலா.! மீண்டும் முதலிலிருந்து.!
தெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தென்னிந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பாலா 'வர்மா' என்ற பெயரில் ரீ-மேக் செய்ய விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை அனைத்தும் வெளியான நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை முதலில் இருந்து எடுக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது இந்த படத்தின் உரிமையை பெற்றுள்ள e4 நிறுவனம்.
பாலா இயக்கி முடித்துக் கொடுத்த ‘வர்மா’ படம் தயாரிப்பு தரப்புக்கு திருப்தி அளிக்கவில்லையாம், அதனால் வேறு நடிகர், இயக்குனருடன் படம் மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாவுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ‘வர்மா’ கைவிடப்படிருக்கலாம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
https://twitter.com/e4echennai/status/1093471829224607744
மேலும், அந்த அறிக்கையில் புதிதாக எடுக்கபோகும் படத்திலும் விக்ரம் மகன் தான் ஹீரோ எனவும், ஆனால், இயக்குனர் உட்பட மற்ற கலைஞர்கள் பற்றிய விவரத்தை விரைவில் வெளியிடுகிறோம் என்றும் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.