'Freeயா இருந்தா வாங்க சார், என் பொண்டாட்டி நல்லா டீ போடுவா' தன்னை பாராட்டிய அஸ்வினை வீட்டிற்க்கு அழைத்த கிச்சா, தன் குசும்பில் பதில் அளித்த அஸ்வின்.

By Rajkumar · 19/5/2022

சமீபத்தில் வெளியான விலங்கு வெப் தொடரை பார்த்து தன்னை பாராட்டிய அஸ்வினை டீ சாப்பிட அழைத்து இருக்கிறார் கிச்சா. அதற்க்கு அஸ்வின் கூறிய பதில் படும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து பிறகு தன்னுடைய கடும் உழைப்பினால் கதாநாயகன் ஆனார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார்.

இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான விலங்கு வெப் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : தனுஷுடன் நடித்த படுக்கையறை காட்சி குறித்து மோசமான கேள்வி கேட்ட நபர் - மாளவிகா கொடுத்த பதிலடி.

பெரும் வரவேற்பை பெற்ற விலங்கு :

பிரசாத் பாண்டிராஜ் இயக்கிஇருந்த இந்த தொடரில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள்நடித்து இருந்தார்கள். இந்த தொடர் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த தொடரில் நடித்த அனைவரின் நடிப்பும் பாரட்டப்பட்டாலும் கிச்சா என்ற கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது.

https://twitter.com/ZEE5Tamil/status/1526566963027161088

கிச்சாவை பாராட்டிய அஸ்வின் :

அதிலும் அவர் பேசிய 'கிச்சான்னாலே இளிச்ச வாயன் தான' என்ற வசனம் மீம் மெட்டீரியலாக கூட மாறியது. மேலும், இந்த தொடரில் கிச்சா கதாபாத்திரம் பலரிடமும் 'என் பொண்டாட்டி சூப்பரா டீ போடுவா, வீட்டுக்கு வாங்களேன்' என்று அழைத்து சென்று பின் அவர்களை தன் மனைவி மூலம் மயக்கி வலையில் விழ வைத்து அவர்களிடம் பணம் பரிபார். இந்த நிலையில் இந்த தொடரை பார்த்துவிட்டு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டி இருந்தார்.

டீ சாப்பிட அழைத்த கிச்சா :

அதிலும் குறிப்பாக கிச்சா கதாபாரத்திரத்தில் நடித்த ரவியை குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரவி 'அஸ்வின் சார், வணக்கம் சார், நீங்க விலங்கு பார்த்தேன் என்று சொன்னது மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் அப்படி சொன்னது எனக்கு ஒரு எனர்ஜியை கொடுத்து இருக்கிறது என்று கூறியுள்ள ரவி இறுதியாக 'நீங்க பிரீயா இருந்தா வாங்களேன் ஒரு டீ சாப்பிட்டு போகலாம், என் பொண்டாட்டி நல்லா டீ போடுவா' என்று விலங்கு படத்தில் வரும் வசனத்தை கூறி இருந்தார்.

https://twitter.com/ashwinravi99/status/1526634087813095424

அஸ்வினின் குசும்பான பதில் :

இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோ தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் அஸ்வின், விலங்கு தொடரில் மிகவும் பிரபலமான ' 'கிச்சான்னாலே இளிச்ச வாயன் தான' என்ற Meme Templateஐ பகிர்ந்து கிச்சா என்று பதிவிட்டு இருக்கிறார். அஸ்வினின் இந்த பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full