தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் அஜித்-விஜய். இவர்களுடைய படங்கள் திரையரங்கிற்கு வரப்போகிறது என்றால் போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் அஜித்- விஜய் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவரின் மனைவி மற்றும் மகன் இருவரையும் போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அஜித் நடித்த படம் ரெட், விஜய் நடித்த குஷி, சுக்கிரன், ஆதி உட்பட படங்களில் வில்லனாக நடித்தவர் ராஜன் பி தேவ்.

இவர் அஜித்-விஜய் மட்டுமில்லாமல் பல பிரபலங்களின் படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியிருக்கிறார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.

Advertisement

ராஜன் பி தேவ் நடித்த படங்கள்:

இவர் ஆலப்புழை மாவட்டம் சேர்தலாவில் பிறந்தவர். இவர் நாடக நடிகராக தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின் காட்டுக்குதிரை எனும் நாடகத்தில் கொச்சுவாவ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார். இந்த நாடகம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் இந்த நாடகம் ஆயிரம் முறை அரங்கேற்றப்பட்டது. பின் இவர் இந்திரஜாலம் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

ராஜன் பி தேவ் இறப்பு:

ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிறகு பல மொழி படங்களில் 180 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் ஈரல் கோளாறு காரணமாக தான் இவர் இருந்தார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் காலமானார். இந்நிலையில் நடிகர் ராஜன் பி தேவ் உடைய மனைவி சாந்தம்மா. இவருடைய மகன் உன்னி. இவர்கள் இருவரையும் தற்போது போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது.

Advertisement

ராஜன் பி தேவ் மனைவி மற்றும் மகன் கைது:

நடிகர் ராஜன் பி தேவ் மகன் உன்னினிக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 100 பவுன் தங்க நகைகளை வரதட்சணையாக பிரியங்கா கொண்டு வந்திருக்கிறார். அதை உன்னி மற்றும் அவரது தாயார் சாந்தம்மா இருவரும் வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக சொல்லப்பட்டது. இப்படியே இவர்கள் இருவரும் வரதட்சணை கேட்டு அந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

Advertisement

வரதட்சணை கொடுமை சம்பவம்:

மேலும், பிரியங்கா தற்கொலைக்கு முன் தனது சாவுக்கு உன்னியும் அவரது அம்மாவும் தான் காரணம் என்று ஒரு கடிதமும் எழுதி வைத்திருக்கிறார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தான் காவல்துறையினர் உன்னி மற்றும் சாந்தம்மா இருவரும் கைது செய்தனர். உடனே சாந்தம்மா ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதேபோல் கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் குடும்பம் வரை என பல பெண்கள் தற்கொலை செய்து உள்ளார்கள். சமீப காலமாக இந்த சம்பவம் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

Advertisement