சரியாக அழவில்லை என்று இயக்குனர் என்னை பயங்கரமாக அடித்துவிட்டார் என்று வில்லன் பட குட்டி அஜித் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று படக்குழு கூறியிருந்தனர். இப்படி அஜித் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.

Advertisement

அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்றுதான் வில்லன். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த திரைப்படம் தான் வில்லன். இந்த படத்தில் அஜித்குமார், மீனா, கிரண், சுஜாதா, விஜயகுமார், ரமேஷ் கண்ணா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் அதிக வசூலையும் ஈட்டு தந்து இருந்தது. மேலும், இந்த படத்தில் சிறு வயது அஜித்தாக சிவா- விஷ்ணு ரோலில் நடித்தவர்கள் தான் தினேஷ் ஷா – நரேஷ் ஷா. இதில் மாற்றுத்திறனாளியாக விஷ்ணு கதாபாத்திரத்தில் நரேஷ் நடித்திருந்தார். தம்பியாக சிவா கதாபாத்திரத்தில் தினேஷ் நடித்திருந்தார். இந்நிலையில் 20 வருடங்கள் கழித்து வில்லன் பட குட்டி அஜித்கள் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

அதில் அவர்கள் தன்னுடைய வில்லன் பட அனுபவம் குறித்து கூறியிருந்தது, வில்லன் படத்தில் அஜித் சாருடைய சிறுவயது கதாபாத்திரத்தில் நாங்கள் நடித்திருந்தோம். முதலில் இயக்குனர் எங்களில் யார் அண்ணன் தம்பி என்று கேட்டார்கள். நான் தம்பி அவர் அண்ணன் என்று சொன்னேன். பின் அவர்கள் என்னை கோட் சூட் போட்டு வர சொன்னார்கள். அப்படியே நாங்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தோம். அதையும் சில காட்சிகள் அவர்கள் எடுத்து விட்டார்கள். அதற்கு பிறகு தான் எங்களுக்கு கதாபாத்திரம் என்ன என்று தெரிந்தது.

Advertisement

அஜித் சாருடன் அந்த படத்தில் நடித்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. அப்போதெல்லாம் மொபைல் போன் எல்லாம் எதுவும் கிடையாது . அதனால் கேமராமேனை அழைத்து அவரிடம் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த போட்டோவை நாங்கள் எங்கள் வீட்டில் பிரேம் பண்ணி வைத்திருக்கிறோம். அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி இருப்பதை கூட லேமினேஷன் பண்ணி வைத்திருக்கிறோம். படத்தில் ஒரு காட்சியில் விஷ்ணுவை ரௌடிகள் அடித்து காலை உடைத்து விடுவார்கள். அப்போது அவரை பார்த்து நான் அழவேண்டும். அதனால் நான் அழுதேன். ஆனால், இது சரி இல்லை இன்னும் நன்றாக அழவேண்டும் என்று இயக்குனர் சொன்னார். ரெண்டு மூணு டேட் வாங்கியும் எனக்கு சரியாக வரவில்லை.

உடனே இயக்குனர் என்னை அழைத்து பளார் பளார் என்றும் மூன்று அரைவிட்டார். நான் அழ வேண்டும் என்பதற்காக அவர் என்னை அடித்தார். ஆனால், நான் எல்லோரும் முன்னாடியும் அழுதால் அவமானமாக இருக்கும் என்று நினைத்து நான் அளவில்லை. அதற்கு பிறகு எப்படியோ அந்த காட்சியை நடித்து முடித்து விட்டேன். பின் இயக்குனர் என்னை அழைத்து, மன்னித்து விடுப்பா நீ இந்த காட்சியில் சரியாக நடிக்க வேண்டும் என்று தான் நான் அப்படி செய்தேன் என்று சொன்னார். அவர் சொன்ன உடனே பயங்கரமாக தேம்பி தேம்பி அழுதேன். இப்படி நிறைய இந்த படத்தின் மூலம் எங்களுக்கு அனுபவங்கள் இருக்கிறது. இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருப்பது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. அதோடு சிவா என்ற நான் தளபதி ஃபேன், விஷ்ணு தல ரசிகன் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Advertisement