வித்தியாசமான கதையில் விமல் நடிப்பில் வெளிவந்த 'மகா சேனா' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 12/12/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விமல். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்க படம் மகா சேனா. இந்த படத்தை மருதம் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே, மஹிமா குப்தா , யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவகிருஷ்ணா, இலக்கியா, சுபாங்கி ஜா, விஜய் சேயோன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை தினேஷ் கலைச்செல்வன் எழுதியிருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

இரு வேறு பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஹீரோ விமல், மகிமா குப்தா. இவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் காதலர்களாக இருக்கிறார்கள். அதோடு அவர்களுடைய இனத்தின் தலைவர்களாக இருவரும் இருக்கிறார்கள். இந்த பழங்குடி மக்களிடையே பல தலைமுறைகளாக ஒரு சிலை தொடர்பான பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பிரச்சனையில் விமல், மகிமா குப்தாவினுடைய அப்பாக்கள் கொல்லப்படுகிறார்கள்.

அதோடு இந்த சம்பவத்தால் இவர்களுக்குள் இன்னும் பகை அதிகமாக உருவாகிறது. இதனால் இருவருமே பிரிந்து விடுகிறார்கள். காலங்கள் கடந்த பிறகு விமல்-ஸ்ருஷ்டி டாங்கே, மகிமா குப்தா - விஜய் சேயோன் என்பவரையும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பகையை பயன்படுத்தி கிங் ஆப் காட்ஸ் அந்த சிலையை கைப்பற்ற முயற்சிக்கிறார். இதற்கு எடுபிடியாக ஜான் விஜய் இருக்கிறார்.

இதற்குப்பின் இந்த மூன்று குழுவினருக்கும் இடையே என்ன நடந்தது? சிலையை யார் எடுத்தார்கள்? இரு இனத்திற்கும் இடையான பகை தீர்ந்ததா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. இந்தப் படத்தில் ஹீரோ விமல் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இடைவெளிக்கு முன்னர் ஒரு சில காட்சிகள் வந்தாலும் இரண்டாம் பாதியில் சிறப்பாக கொடுத்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் நடிகர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சிலையை எடுக்க மூன்று குழுவினருக்கும் இடையே நடக்கும் போராட்ட காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இயக்குனர் ஒரு சுவாரசியமான கதையை கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்திலும் இயக்குனர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். சில காட்சிகள் படத்திற்கு தேவையில்லை. இருந்தாலும் படத்தை தொய்வில்லாமல் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். படத்திற்கு பலமே படத்தினுடைய லொகேஷன் தான். ஒளிப்பதிவு எடிட்டிங் பின்னனி இசை எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று ரசிக்கும்படியாக மகா சேனா இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் நடிப்பு

கதைக்களம்

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

தேவையில்லாத சில காட்சிகள்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் மகா சேனா - சாம்ராஜ்யம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full