ஹேமா கமிட்டி அறிக்கையில் சிக்கிய நிவின் பாலி, வழக்கில் ஏற்பட்ட புது திருப்பம், சாட்சியாக வந்த இயக்குனர்

By subhashini · 6/9/2024

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த செய்தி தான் அதிமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்து விசாரணையும் நடத்தி இருந்தார்கள். பின் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கையை ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் அரசு வெளியிடாமல் இருந்தது.

பின் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அவருடன் சேர்ந்து சிலர் தன்னை மேலும் வன்கொடுமை செய்ததாகவும் நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், கொச்சி ரூரல் எஸ்.பி அலுவலகத்தில் முதலில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு வேலைக்காக அந்தப் பெண் துபாய் சென்று இருந்தாராம்.

பெண் கொடுத்த புகார்:

அப்போது, ஸ்ரீயா என்ற பெண் தனக்கு ஒரு நடிகர் நிவின் பாலியை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி நிவின் பாலி மற்றும் சிலர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த இளம் பெண் கூறி இருந்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர்கள் மீதான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை குழு அந்த இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி, ஸ்ரீயா உட்பட ஆறு பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து நிவின் பாலி, எனக்கு எதிராக கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு என் கவனத்திற்கு வந்ததை அடுத்தே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

https://www.youtube.com/watch?v=vlU9P-ia23I

நிவின் பாலி பேட்டி:

இது உண்மைக்கு புறம்பானதும், மோசமான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இதன் பின்னால் செயல்படுபவர்களை சட்டத்துக்கு முன் கொண்டு வர எந்த எல்லைக்கும் நான் செல்வேன். என்னை புரிந்து கொண்டு, தொடர்பு கொண்டவர்களுக்கு எனது நன்றி. இந்த வழக்கை நான் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என்று குறிப்பிட்டு இருந்தார். பின் செய்தியாளர்களை சந்தித்தபோது நிவின், இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு எதிராக முதன்முதலாக இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. அந்தப் பெண் யார் என்று எனக்கு தெரியாது. இந்த குற்றச்சாட்டு என்னையும், என் குடும்பத்தையும் பல வகையில் பாதித்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதி. இதை சட்டத்தின் வழியில் எதிர்கொள்வேன்.

நிவின் பாலி மீதான வழக்கு:

ஏற்கனவே ஒரு முறை இதுபோன்று புகார் உள்ளதாக காவல்துறை அதிகாரி அழைத்திருந்தார். அந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நினைத்து நான் அப்போது அந்தப் பெண் மீதும் புகார் அளிக்கவில்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஹோட்டல் ஆவணங்கள் வெளியாகி இருக்கிறது. நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்திருந்த புகாரில் கூறப்பட்ட நாளில் நிவின் பாலி துபாயிலேயே இல்லை. அவர் கேரளாவில் தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

வெளியான ஆதாரங்கள்:

கொச்சியில் உள்ள தங்கும் விடுதியில் தான் அவர் தங்கி இருக்கிறார். இது தொடர்பான ஹோட்டல் ரசீதும் வெளியாக இருக்கிறது. டிசம்பர் 14 - 15 வரை அங்கேயே அவர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இயக்குனர் வீனித் சீனிவாசன், அந்த பெண் நிவின்பாலி பாலி மீது புகார் கொடுத்திருக்கும் நாள் அன்று நிவின் பாலி என்னுடைய படப்பிடிப்பில் தான் இருந்தார். டிசம்பர் 14-ஆம் தேதி அன்று அவர் என்னுடன் வர்ஷங்களுக்கு ஷேஷம் என்ற படப்பிடிப்பில் இருந்தார். மறுநாள் வரை என்னுடன் தான் இருந்தார். படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் உள்ள நியூக்ளியஸ் மாலில் நடந்தது. அங்கு நிறைய கூட்டம் இருந்ததால் படபிடிப்பை க்ரவுன் பிளாசாவுக்கு மாற்றினோம். அதை முடித்து விட்டு அவர் கேரளாவில் ஒரு வெப் சீரிஸ் படிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full