தன்னிடம் பணத்தை திருடிய நபர்கள் - Demonetisation, Gst, tax ஐ காரணம் சொன்ன சூரரை போற்று பட நடிகை.

By Arun · 21/4/2023

ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை வினோதினி. ஆனால், அதற்கு முன்பு இவர் காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது எங்கேயும் எப்போதும் படம் தான். அந்த படத்தை தொடர்ந்து இவர் கடல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ஜிகர்தண்டா, வன்மம், நண்பேண்டா, அரண்மனை 2, ஆண்டவன் கட்டளை போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் கூட இவர் ஒரு சில காட்சிகளில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தன்னிடம் பணத்தை திருடிய நபர்கள் குறித்து பதிவிட்டுள்ள வினோதினி, திருட்டிற்கு காரணமாக விலைவாசி உயர்வு, gst போன்றவற்றை கூறி இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் 'சென்ற வாரம் என்னிடமிருந்து 2 நபர்கள் மொத்தம் 25000 ரூ திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்).

இருவர் மீதும் போலீஸ் கம்ப்ளையிண்ட் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்றாலும், ஒரு வகையான அன்னாடங்காச்சிகள் தான். ஒருவர் வீட்டு painter. மற்றொருவர் mechanic. தேவைக்காக பணம் திருடிவிட்டனர். CCTV footage இருந்ததால் ஒருவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நம்பருக்கு அழைத்து கழுவி ஊத்தியதாலும் அந்த மனைவியுடன் இவர் இப்பொழுது வாழாததாலும் மற்றொருவர் ஒப்புக்கொண்டார்.

இருவரும் நன்றாக வேலை செய்யக்கூடியவர்கள். In fact, அந்த மெக்கானிக்கை எங்களுக்கு பல வருடங்களாகத்தெரியும். அந்த painter தனியாக project வாங்கியும், Urban Company என்ற corporateஇலும் contract வேலைப் பார்க்கிறவர். சாதாரணமாக, இப்படிப்பட்டவர்கள் உழைத்து சாப்பிடவே நினைப்பார்கள். Lower to middle classஇல் இருக்கும் இதுபோன்றவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் பல aspirationsஓடு வாழ்வர். தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பார்கள்.

பின் இவர்களை (அதாவது களவுக்குப் பரிச்சயமில்லாதவர்களை) எது திருடத்தூண்டுகிறது? இன்றைய காலகட்டமும், நாம் வாழும் சமூகச்சூழலும்தானே. Demonetisation, GST, state taxes, inflation, petrol hike, electricity hike, low quality of goods, increasing divide between rich and poor, high interest rates என்று பொது மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏழைக்குடும்பத்திற்கு கூட சென்னை போன்ற metroவில் மாதம் 20-25000 ரூ தேவைப்படுகிறது. இதில் அதிக நேர வேலை, traffic, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனக்கோளாறுகள், சம்பளங்கள் சரியான நேரத்திற்கு வராத பிரச்சனைகள்.

View this post on Instagram

A post shared by Vinodhini Vaidynathan (@thevinodhini)

corporateகளுடைய vendorகளாக வேலை செய்யும் delivery boys/ executivesஉடைய உழைப்பைச்சுரண்டி commission போக அவர்களுக்கு பிச்சைப்போடுவதுபோல் சம்பளம் தரும் போக்கு என இன்னும் காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இனிவரும் காலங்களில் மனிதனை மனிதன் வயிற்றுப்பசிக்காக அடித்துக்கொல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் அதில் ஒரே நல்ல விஷயம் - அப்பொழுதாவது, சாதி மதம் ஒழிந்து அடுத்த வேளை சாப்பாடு/தண்ணி/காற்று உள்ளவன் - இல்லாதவன் என்ற இரண்டே பிரிவுகளாக நிற்போம்.'என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை வினோதினி Gstஐ கேலி செய்யும் விதமாக வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் பெரும் பேசுபொருளனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full