கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் நடிகை வினோதினி இணைந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை வினோதினி. ஆனால், அதற்கு முன்பு இவர் காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது எங்கேயும் எப்போதும் படம் தான்.

அந்த படத்தை தொடர்ந்து இவர் கடல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ஜிகர்தண்டா, வன்மம், நண்பேண்டா, அரண்மனை 2, ஆண்டவன் கட்டளை போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் இவர் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்திருந்த பொன்னியின் செல்வன் 2 படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வினோதினி நடித்திருக்கிறார்.

Advertisement

மேலும், இந்த படத்தில் இவர் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய் பணிப்பெண் தோழியாக நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை வினோதினி எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் பல சமூகப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறார் .ஆனால், சில நாட்களாகவே இவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பதிவு போட்டு வருகிறார்.

மத்திய அரசு விமர்சித்து வீடியோ:

குறிப்பாக, கடந்த ஆண்டு நடந்த 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசி, பருப்பு, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது குறித்து வீடியோவும் வெளியிட்டு இருந்தார். அது மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. அதன் பின் மத்திய அரசின் வரி குறித்து விமர்சித்து சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இப்படி இவர் மத்திய அரசுக்கு எதிராக பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

மக்கள் நீதி மையம் கட்சியில் வினோதினி:

இந்த நிலையில் தற்போது இவர் கமலஹாசனின் மக்கள் நீதி மையக் கட்சியில் இணைந்து இருக்கிறார். மேலும், இது குறித்து வினோதினி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கடவுள் மற்றும் அந்நியானவாதி இதையே நடக்கும் கலந்துரையாடல் போல சித்தரித்து பதிவிட்டு இருக்கிறார். பின் அதில் ஏன் தான் பாஜக மற்றும் திமுகவில் இணையவில்லை என்பதை குறித்தும் கூறி இருக்கிறார்.

Advertisement
Advertisement