தற்போது இருக்கும் காலகட்டத்தில் சமூக வலைதளத்தின் மூலம் பல்வேரு நபர்கள் ஒரே நைட்டில் பிரபலமடைநது விடுகின்றனர். அதிலும் குழந்தைகள் வீடியோ என்றால் அதற்கு ரீச் மிக விரைவில் கிடைத்துவிடும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாகி கொண்டுவருகிறது rithu rocks என்ற யூடுயூப் சேனல். 7 வயது குட்டிக் குழந்தை ரித்துவின் சமீபத்திய வீடியோ, தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருக்கிறது. இந்த `ரித்து ராக்ஸ்’ (rithu rocks) யூடுயூப் பக்கம் ஆரம்பித்து சில மாதங்கள் ஆகிவிட்டது.

இதில் இதுவரை பல்வேரு வீடியோகளை பதிவிட்டாலும் சமீபத்தில் அந்த சிறுவர், செய்தி வாசிப்பாளராக கலக்கிய வேல்ராஜ் வீடியோ மூலம் தான் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் குழந்தையாக மாற காரணமாக இருந்தது. இதை தொடர்ந்து இவரை தேடி பிடித்து பல யூடுயூப் சேனல்களும் பேட்டி எடுத்து இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் பேட்டி ஒன்றில் பேசிய இருந்தது சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

Advertisement

மேலும், அந்த வீடியோவில் 10 மணி நேரம் படப்பிடிப்பு செய்வோம், ஷூட்டிங் போது தான் அவர் படிப்பார் என்றெல்லாம் பேசி இருந்தது பெரும் விமர்சனதிற்கு உள்ளாகி இருகிறது. இதனால் மனம் நொந்து போய் ரித்துவின் தந்தை ஜோதி ராஜ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விமர்சனங்கள் அனைத்துக்கும் நான் மதிப்பளிக்கிறேன். இந்த காணொளிகள் ரித்விக் விரும்பி கேட்டதால் மட்டுமே உருவாக்கினோம். 

சமீபத்திய காணொளி வைரல் ஆனதைத் தொடர்ந்து, நாங்கள் பல ஊடகங்களுக்கு எங்கள் கருத்துகளை பேட்டியாக கூறியிருந்தோம்.அதில் ரித்விக், ‘பத்து மணிநேரம் படப்பிடிப்பு நடக்கும். பத்து டேக் எடுப்பேன்’ என்று சொன்னான். நானும் அதையே சொல்லியிருக்கிறேன். அந்த பத்து மணி நேரம் பத்து டேக் குறித்து முக்கியமான பேசு பொருளாகியிருக்கிறது. முதலில் எங்களது ஒரு காணொளியை ஒரே நாளில் எடுப்பதில்லை. மூன்று நாள்கள் படப்பிடிப்பு நடைபெறும்.ஞாயிறு அன்று இரண்டு மணி நேரம் நான் கதை வசனம் எழுதுவேன். திங்கள் அன்று ரித்விக்கின் மூன்று மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும், மதிய உணவுக்கு பிறகு ரித்விக் ஓய்வெடுப்பான்.

Advertisement

பின் மாலை 4 அல்லது 5 மணிக்கு எங்களது படப்பிடிப்பு தொடங்கும். முதல் நாள் மூன்று மணி நேரம் படப்பிடிப்பு நடத்துவோம். எங்களது வீடு பிரதான சாலையை ஒட்டியுள்ளதால் அதிக அளவில் வாகனங்கள் செல்லும். அப்போது காணொளியை நிறுத்த வேண்டி இருக்கும்.மூன்று நாள்களின் மொத்த படப்பிடிப்பு நேரத்தைத்தான் நாங்கள் பத்து மணி நேரம் ஆகும் எனச் சொன்னோம்.இதை நாங்கள் ஊடகத்தில் சரியாக பதிவு செய்யவில்லை. சிலர் இதை தவறாக புரிந்து கொண்டு எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

Advertisement

விவாதங்களும் நடைபெறுகின்றன. நானும் எனது மனைவியும் ஒருபோதும் ரித்விக்கிற்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது.  எங்கள் மகன் ரித்விக்கை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் தினம் ஒரு காணொளி எங்களால் போட முடியும்.நாங்கள் ரசித்த காணொளியை, மக்களும் ரசிக்க வேண்டும், இதை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று நானும் எனது மனைவியும் ஆசைப்பட்டோம். அவ்வளவுதான்… இந்த நொடியே ரித்விக் எனக்கு நடிக்க பிடிக்கவில்லை என்று சொன்னால் மறுகணமே நாங்கள் யு-ட்யூப்பை விட்டு வெளியேறிவிடுவோம். சில விமர்சனங்கள் எங்களை காயப்படுத்துகிறது. எது நடந்தாலும் நாங்கள் மக்களை மகிழ்வித்து கொண்டு இருப்போம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement