விசுவாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. இது அனைவருக்கும் தெரிந்தே. விசுவாசம் படத்தில் டி. இமான் இசையமைப்பாளர் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய “கண்ணான கண்ணே, கண்ணான கண்ணே” என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. சமூக வலைத்தளங்களில் பிரச்சனைகள், சண்டைகள், சர்ச்சைக்குரிய விஷயங்கள், சந்தோஷமான நிகழ்வுகள், உதவிக்கரங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அந்த வகையில் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி அவருக்கு படத்தில் பாட வாய்ப்பும் கிடைத்தது. அந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் அந்த வீடியோ வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்தனர். மேலும், அந்த வீடியோவை 20,000 அதிகமான பேர் ஷேரும் செய்தார்கள் என்ற தகவல் வெளியானது.

Advertisement

அதுமட்டுமில்லாமல், இரவோடு இரவாக விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் இமான் அவர்கள் அந்த பார்வையற்ற இளைஞர் பாடிய பாடல் வெளிவந்த வீடியோவை பார்த்தார்.இந்த வீடியோவை பதிவிட்டு இவரை தொடர்பு கொள்ள இவருடைய மொபைல் எண்ணை தெரிவியுங்கள் ஆன்லைன் நண்பர்களே ! என்று ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார். உடனே, இரண்டு மணி நேரத்தில் மொபைல் நம்பர் தெரிந்ததும், அந்த இளைஞரிடம் இமான் பேசினார். அவர் சீக்கிரமே பார்வையற்ற இளைஞரை ஒரு பாடல் பாட வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சொன்னது போலவே தனது படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் திருமூர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊரில் இருந்த திருமூர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள முகாமில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் சுமார் 100க்கும் மேற்பட்டோர் முகாமில் உள்ளனர். இங்கிருக்கும் மக்களை தன் இசையால் கவர்ந்து வருகிறார் திருமூர்த்தி. 

Advertisement
Advertisement