'மீண்டும் நான் கல்யாணமே பண்ண மாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்' - வனிதா ஓப்பன் டாக்
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் தன் வாழ்க்கை குறித்து முன்பு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர்தான் வனிதா விஜயகுமார். இவர் நடிகை, பிக் பாஸ் விமர்சகர், சோசியல் மீடியா பிரபலம், சமையல் கலைஞர் மற்றும் தொழிலதிபர் போன்ற பன்முகங்களை கொண்டவர். இந்நிலையில் இவர் அளித்த பேட்டியில் , எப்போதும் செய்தியாளர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகள் தூண்டில் வீசுவதைப் போல தான் இருக்கும்.
அவர்கள் அனைவரும் நான் வெற்றிப் பெற்ற பிறகு மட்டும் என்னுடன் இல்லை. நான் கஷ்டப்படும் காலங்களில் கூட என்னுடன் இருந்தவர்கள். அவர்கள் அனைவரும் என் மீது அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள். நான் பொதுவாக எப்போதும் ஓப்பன் ஆக பேசுவேன், அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சமீபத்தில் ஒரு ஷோவில் என்னிடம் கல்யாண சாப்பாடு எப்போ போடுவீங்க என்று ஒருவர் கேட்டது பயங்கர வைரல் ஆகி இருந்தது. இந்த கேள்வி எல்லார்கிட்டயும் அந்த மாதிரி கேட்க முடியாது.
வனிதா விஜயகுமார் பேட்டி:
சினிமாவில் இந்த மாதிரி கேள்வி எல்லாம் ஒரு சிலர் கிட்ட மட்டும் தான் கேட்க முடியும். நடிகர் பிரசாந்த், சல்மான் கான், சிம்பு போன்றவர்களிடம் தான் இந்த கேள்வியை கேட்க முடியும். நமக்கு என்று ஒரு கணவரோ, துணைவரோ இல்லை என்றால் பொதுமக்கள் நம்மை ஒரு தனி மனிதராகத்தான் பார்க்கிறார்கள். நம் மீது உள்ள ஒரு அன்பில்தான் அவர்கள் அப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் அந்த கேள்வியை எழுப்பியது தொகுப்பாளினி பிரியங்கா தான். நல்லதுணை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஒரு அக்கா தங்கை பேசிக் கொள்வதை போல தான் நாங்கள் பேசிக் கொள்வோம்.
முடிவே கிடையாது:
மேலும், நான் எந்த ஒரு விஷயத்திற்கும் புள்ளி வைப்பதில்லை. கமாவில் தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அது ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் சரி, புள்ளி வைக்க முடியாது. புள்ளி என்றால் அது முடிவு. நான் மீண்டும் கல்யாணமே பண்ண மாட்டேன் என்றெல்லாம் சொல்லவே மாட்டேன். நாம எந்த வயதில் இருந்தாலும், நான் என்ன அறிவிக்கப் போகிறேன் என்று மக்கள் எதிர்பார்ப்போடு இருப்பதை நான் ஆசீர்வாதமாக தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். நான் எப்போதும் என் மனதில் வஞ்சத்தை வைத்திருக்க மாட்டேன்.
மகன் குறித்து:
ஆனால், கடவுளுக்கு என்று ஒரு திட்டம் இருக்கிறது. என்னுடைய மகனின் திரைப்படப் பயணமும் அப்படிதான். கடவுள் என்னையும், என் பிள்ளையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவன் எவ்வளவு பெரிய பையனாக இருந்தாலும், அவன் எனக்கு குழந்தை மாதிரி தான். அவன் சின்ன வயசிலேயே விஜய் ரசிகன். விஜய் மாதிரி தான் அவன் நடிப்பான். அவனுக்கு இப்போது அம்மா முக்கியம் இல்லாமல் இருக்கிறது. அவன் இந்த இடத்திற்கு வந்திருக்கிறான் என்றால் அதற்கு என்னுடைய பங்கு பெரியது. இனி என்னை போல, அவன் தான் போராடி மேலே வர வேண்டும்.
https://www.youtube.com/watch?v=nxxrzoZO4_g
மகள் ஜோவிகா குறித்து:
அதேபோல் நான் என் மகள் ஜோவிகாவை ஒரு நடிகையாக வேண்டும் என்று என்றுமே நினைத்தது கிடையாது. நானே சினிமாவை விட்டு வெளியே வந்தவள், நான் ஏன் என் குழந்தையை அங்கே தள்ளப் போகிறேன். ஆனால், அவள் அதை விரும்புகிறாள். ஒரு தாயாக அதற்குத் துணை நிற்க வேண்டியது என்னுடைய கடமை என்று தான் சொல்ல வேண்டும். சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டதுதான் நான் பண்ண பெரிய தப்பு. நான் செஞ்ச தப்பை இப்ப இருக்க ஜெனரேஷன் செய்ய மாட்டாங்க. என்னை அனைவரும் 'வைரல் ஸ்டார் வனிதா 'என்று அழைக்கிறார்கள். நான் யாரிடமும் அப்படி போட சொல்லவில்லை, அதேபோல் அவர்கள் அப்படி சொல்வதை நான் தடுக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.