விருஷ்கா தம்பதி மகளின் முதல் புகைப்படம் - குவியும் லைக்ஸ். என்ன பெயர் தெரியுமா ?

By Rajkumar · 1/2/2021

சினிமாவும் கிரிக்கெட்டுக்கு என்றும் பிரிக்கமுடியாத ஒரு விடயமாக தான் இருந்து வருகிறது. சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் ஒருவர்.விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் பல ஆண்டுகளாக காதல் செய்தது 2017 ஆம் ஆண்டு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் விருஷ்கா என்ற செல்லப் பெயரும் உள்ளது. அனுஷ்கா ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இவர் மைதானத்திற்கு வருவதால் தான் விராட் கோலி சரியாக ஆடுவது இல்லை என்ற சில சர்ச்சைகளும் கூட எழுந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதியில் சிறு காகிதம் போட்ட நபரை பின் தொடர்ந்து வாக்கு வாதத்தில் கூட ஈடுபட்டது பெரும் சர்ச்சையாக வெடித்து.

பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் கூட புகையிலை விளம்பர படமொன்றில் நடித்திருந்தார்.இவர்கள் இருவரும் வாழ்ந்தது போதும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகிறார்கள் என்பது போல் இந்த செய்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் இது வதந்தி என்று தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் போதும் கூட இதே போன்று இவர்கள் இருவருக்கும் இடையேயான சிறிய பிரிவினை பெரிய விடயமாக கிளப்பிய நெட்டிசன்கள் மீண்டும் அதே வேலையை துவங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மேலும், அந்த குழந்தைக்கு வாமிகா என்று பெயரையும் வைத்துள்ளனர் விருஷ்கா தம்பதியினர். இப்படி ஒரு நிலையில் நடிகை அனுஷ்கா, முதன் முறையாக தனது செல்ல மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full