எப்படி இருக்கிறது விருமன் - முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் ரியாக்‌ஷன்ஸ் இதோ.

By Arun · 12/8/2022

விருமன் படத்தை பார்த்த ரசிகர்களின் ரியாக்சன் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா.

https://twitter.com/KumarSwayam3/status/1557907048511275009

அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் முத்தையா இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் ஆவார். இவர் விருமன் படத்திற்கு முன்பே தெலுங்கில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். தற்போது விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார்.

https://twitter.com/vendan__/status/1557801208840130561

அதோடு இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற மதுர வீரன் என்ற படலை அதிதி பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.

இதில் கார்த்திக், அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். இதனை அடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படத்தின் விளம்பரத்திற்காக மும்முரமாக செயல்பட்டு இருந்தார்கள். இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த விருமன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. மேலும், விருமன் படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் அவர்கள் கூறியிருப்பது,

படம் சூப்பர்.

பிஜிஎம் வேற லெவல்.

படத்தின் டைட்டில், யுவன் பாடல் எல்லாமே தெறிக்க விட்டிருக்கிறது.

படம் தீயாய் இருக்கு.

விக்ரம் என்னய்யா ஹிட்டு. அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு விருமன் படம் இருக்கிறது. வெறித்தனம் என்று ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளை தெறிக்க விடுகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full