ரிவ்யூ எடுக்க அவங்கள தியேட்டர் உள்ள விடாதீங்க - மேடையிலேயே பொங்கி எழுந்த நடிகர் விஷால்

By subhashini · 17/7/2025

விஷால் விஷால் வைத்த கோரிக்கையால் யூடியூபர்ஸ் ஆடி போய் இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே யூடியூபர்ஸ் படம் வந்த சில மணி நேரத்திலேயே ரிவ்யூ என்ற பெயரில் மொத்த கதையுமே சொல்லி விடுகிறார்கள். அதில் சிலர் பாசிட்டிவாக சொன்னாலும் சில பேர் நெகட்டிவ்வாகத்தான் சொல்கிறார்கள். குறிப்பாக, முதல் காட்சி வந்த பின்னர் சில யூடியூபர்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் கருத்து கேட்கிறார்கள்.

ரசிகர்கள் சிலர் தங்களுக்கு விருப்பமான கருத்துக்களை சொல்கிறார்கள். அது சில நேரம் ரொம்பவே பாதிக்கிறது. ஒரு சிலர் வேண்டும் என்று ரசிகர்கள் சொல்லும் நெகட்டிவ்வான கருத்துக்களை மட்டும் தான் தங்களுடைய சேனலில் ஒளிபரப்புகிறார்கள். இதனால் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், படத்தின் விநியோகஸ்தர்கள் என பலருமே பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக புகார்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது.

விஷால் பேட்டி:

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ரசிகர்களிடம் தியேட்டருக்குள் யூடியூபர்களை அனுமதிக்க கூடாது என்றெல்லாம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் கூறியிருப்பது, தயவு செய்து தப்பா நினைக்காதீர்கள். நீங்கள் தப்பா நினைத்தாலும் நான் இதை சொல்லுவேன். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=YM_NnZJ0Bj8

விஷால் வைத்த கோரிக்கை:

படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்கள் அதாவது 12 காட்சிகளுக்கு தியேட்டருக்குள் ரிவ்யூ எடுக்க எந்த யூடியூபர்ஸ் அனுமதி கொடுக்கக் கூடாது. அப்படியே ரிவியூ எடுக்க மைக்கை நீட்டிட்டு வராங்கனா, தியேட்டருக்குள்ளயே விடாதீங்க. வெளியே ரோட்டில் நின்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு படம் பார்த்து அவர்கள் விமர்சனம் சொல்லிவிட்டு அதற்கு பிறகு வேண்டுமானால் மற்றவர்களின் விமர்சனத்தை கேட்கட்டும் என்று கூறி இருக்கிறார்.

யூடியூபர்ஸ் நிலை:

இப்படி விஷால் பேசி இருக்கும் விஷயம்தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு சில யூடியூபர்ஸ், படத்தின் ரிவ்யூவை வைத்து தான் தங்களுடைய சேனல்களையே நடத்துகிறார்கள். விஷாலின் இந்த கோரிக்கை அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இன்னொரு தரப்பினர் விஷாலின் இந்த கோரிக்கைக்கு பாராட்டியும் வரவேற்றும் வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

விஷால் திரைப்பயணம்:

இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார். கடைசியாக விஷால்- சந்தானம் கூட்டணியில் வெளியாகி இருந்த மதகஜராஜா படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றது. இதை அடுத்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full