விஜய் எனக்கு இன்ஸ்பிரேஷன் தான்,ஆனால் ஓட்டு போட சைக்கிளில் சென்ற காரணம் இதனால் தான் - விஷால் தாக்கு

By Rajkumar · 23/4/2024

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சைக்களில் வந்து வாக்களித்த காரணம் குறித்து கூறி இருக்கிறார் விஷால். தமிழ்நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. இப்படி ஒரு நிலையில் வாக்களிக்க வந்த விஷால் தனது வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் சென்று இருந்தது பெரும் கேலிக்கு உள்ளானது.

https://twitter.com/ThanthiTV/status/1781276053803036930

விஷாலின் இந்த செயலை பார்த்த பலரும் சைக்கிளில் வந்தால் விஜய் ஆகிவிட முடியுமா? என்று சமூக வலைதளத்தில் இவரை கேலி செய்ய துவங்கினர். அதற்கு முக்கிய காரணம், கடந்த தேர்தலின் போது விஜய் சைக்கிளில் வந்து வாக்களிக்க வந்த போது அவரை சுற்றி மீடியாவும் ரசிகர்கள் கூட்டமும் பின் தொடர்ந்து வந்தது. ஆனால், விஷால் சைக்கிளில் வந்ததை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் விஷால். மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து தற்போது விஷால் ஹரி இயக்கத்தில் 'ரத்னம்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் சேலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

இந்த நிகழ்வின் போது கூட்டத்தில் இருந்த மாணவன் ஒருவர் 'எங்கு சென்றாலும் உங்களின் இன்ஸ்பிரேஷன் யாரென்று கேட்டால் விஜய் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதேபோல நீங்கள் இயக்குனராக அறிமுகமானார் யாரை வைத்து படம் எடுப்பீர்கள் என்று கேட்டால் விஜய் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதனால் சமீபத்தில் நீங்கள் சைக்கிளில் சென்று வாக்களித்தது விஜயை பார்த்து Inspire ஆனது தானா என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த விஷால் 'விஜய் பொறுத்தவரை அவரின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் அவர் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார்.ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று ஒரு தளபதியாக இருகிறார் என்றால் உங்களை போல எனக்கும் அது இன்ஸபிரேஷன் தான். ஆனால் நான் சைக்கிளில் போனதற்கு காரணம் விஜயின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்ல முடியாது.

https://twitter.com/TheAakashavaani/status/1781671658891489366

என்னிடம் வண்டி இல்லை அப்பா அம்மாவிடம் தான் வண்டி உள்ளது என்னுடைய வண்டியை விட்டு விட்டேன் இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் ஆண்டுக்கு மூன்று முறை மாற்ற முடியாது என்னிடம் அவ்வளவு காசு இல்லை. அதனால் சைக்கிள் வாங்கினேன் டிராபிக் இல்லாமல் சீக்கிரம் சென்று விடலாம். ஒரு முறை ஷூட்டிங்கில் கூட காரைக்குடியில் இருந்து இளையராஜா பாட்டை கேட்டுக்கொண்டே சைக்கிளில் சென்றேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full