காய்ச்சலிலும் நான் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு இவர் தான் காரணம் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்
தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு விஷால் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மதகஜராஜா படம்:
அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது. அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருக்கிறார்கள். உண்மையில் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் வந்திருக்கிறது என்று கூறி இருந்தார்கள்.
பாடகி சுசித்ரா வீடியோ:
பின் இது தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில் விஷாலை மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். அதில் அவர், விஷால் கண்ணெல்லாம் மஞ்சள் கலர், பல் எல்லாம் மஞ்சள் கலரில் இருந்தது. அவன் கையில் வேற ஒரு ஒயின் பாட்டில் இருந்தது. அப்போது அவன், கார்த்திக் இல்லையா? என்று கேட்டான். நான் இல்லை என்று சொல்லிவிட்டேன். அதற்கு பிறகும் என்னிடம் அவன், நான் வீட்டுக்குள் வரலாமா? என்று கேட்டான். நான் முடியாது என்று சொன்னேன். இது தான் உங்க விஷால். அவருக்காக தான் நீங்க எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, அன்னைக்கு ஒயின் பாட்டில் புடிச்சிட்டு இருந்த கை தான் இன்னைக்கு நடுங்குது. எனக்கு ரொம்ப சந்தோஷம் இப்படி பாக்குறதுக்கு என்று கூறியிருந்தார்.
விஷாலுக்கு ஆதரவு:
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். பின் இதற்கு நடிகை ஷர்மிளா, விஷாலை பற்றி தவறாக பேசுவது எனக்கு கோபம் தான் வருகிறது. காரணம், தனிப்பட்ட முறையில் எனக்கு விசாரணை பற்றி நன்றாகவே தெரியும். சோசியல் மீடியாவில் எந்த ஒரு செய்தி விவாதத்திற்கு வரும்போது அதை பற்றி பேசுவதை சுசித்ரா வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படித்தான் விஷால் குறித்தும் பேசி இருக்கிறார்.
சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது ஒரு பாடகியின் வீட்டுக்கு அனைவரும் செல்வதற்கான காரணம் என்ன? ஒரு நல்ல மனிதர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலைமையிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது வைப்பது தேவைதானா? என்று வெளுத்து வாங்கி இருந்தார்.
விஷால் விளக்கம்:
இந்நிலையில் சமீபத்தில் மதகராஜா படத்தினுடைய ஸ்பெஷல் காட்சி திரைப்படப்பட்டது. அதில் நடிகர் விஷாலுமே கலந்திருந்தார். அப்போது அவர், அன்று என்னுடைய கை நடுங்கியதற்கு காரணம் எனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. என் அப்பா, அம்மா கூட இந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், நான் சுந்தர் சிக்காகவும் இப்படத்திற்காகவும் தான் வந்தேன். பல வருடங்கள் கழித்து இந்த வருடம் வருவதால் அதை நான் புறக்கணிக்க விருப்பமில்லை. நீங்கள் எனக்கு காட்டிய அன்பை பார்த்து நான் கண்கலங்கி போனேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்குமே என்னுடைய நன்றி என்று கூறி இருக்கிறார்.