ஸ்ரீரெட்டியின் அனகோண்டா சர்ச்சை, முதல் முறையாக படு ஓப்பனாக பதில் சொன்ன விஷால் - இதோ வீடியோ

By Arun · 16/4/2024

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீரெட்டி விஷால் சர்ச்சை கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும் விஷால் குறித்து பேட்டி ஒன்றில் ஸ்ரீரெட்டி பேசிய அனகோண்டா வசனம் பெரும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விஷால் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=RoalcCbh8jU

அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமான செல்லமே திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு ஓப்பனிங்காக அமைந்தது. அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது.

மேலும், விஷால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்து இருக்கிறார் விஷால். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விஷால், ஸ்ரீரெட்டி சர்ச்சை குறித்து பதில் அளித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர்கள் பவன் கல்யாண் முதல் தமிழ் நடிகர் விஷால் வரை பரபரப்பை கிளப்பும் வகையில் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

https://www.youtube.com/watch?v=drbhS5zllWA

அதிலும் பேட்டி ஒன்றில் விஷாலுக்கு அனகோண்டா மாதிரி இருக்கிறது என்று மிகவும் கொச்சையாக பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் 'நல்ல வேலை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல' என்று விஷால் வசனம் பேசியதோடு கிளைமாக்ஸ் காட்சியில் அனகோண்டா என்ற மிகப்பெரிய பீறிங்கி ஒன்றையும் கொண்டு வந்து இருப்பார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் விஷால்.

அதில் பேசியுள்ள அவர் ' அந்த பேட்டி என் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலரை விட அதிக ஹிட் அடிச்சது. அதற்க்கு பின்னர் தான் மார்க் ஆண்டனி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அந்த வசனத்தை வைத்தோம். அதுக்கு தியேட்டரில் செம கிளாப்ஸ் வந்தது. அதே போல முன்னாடி நான் சீன் பேப்பர் பார்க்கவில்லை. படப்பிடிப்பின் போது ஸ்கூட்டர் வந்து இடிக்கும். அப்போது நல்ல வேலை என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகவில்லை என்று இயக்குனர் சொல்ல சொன்னார்.

வீடியோவில் 5 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

உடனே நான் டேய், எதுக்குடா இது. இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருக்கு. நீ மறுபடியும் கிளப்பி விடாதே என்று சொன்னேன். இதற்கு இயக்குனர் இது டபுள் மீனிங் கிடையாது. இதை மட்டும் பார்த்தாங்க என்றால் டபுள் மீனிங் என நினைப்பாங்க. ஆனால், கிளைமாக்ஸ் பார்க்கும்போது மக்கள் எல்லாத்தையும் புரிஞ்சிப்பாங்கன்னு சொன்னார். அவர் சொன்னது போலவே ரசிகர்கள் அதை ரசித்தார்கள் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full