சின்ன பசங்க எல்லாம் இயக்குநராகிட்டாங்க நாம மட்டும் ஏன் பின் தங்கி இருக்கோம்னு தோனுது - விஜய் மகன் குறித்து புரட்சி நடிகர்.

By Arun · 31/8/2023

பாலிவுட் போலவே தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கின்றார்கள் விஜய் சூர்யா விக்ரம் கௌதம் கார்த்திக் ஜீவா சிபிராஜ் ராதிகா சரத்குமார் அருண் விஜய் சாந்தனு என்று பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர் என்னதான் சினிமா பின்புறம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்கள் மட்டுமே நீடிக்கும் முடிகிறது இருப்பினும் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு சமீப காலமாக பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

https://twitter.com/LycaProductions/status/1696092773978714498?ref_src=twsrc%5Etfw

சமீபத்தில் தான் நடிகர் விக்ரமின் மகன்துருவ் விக்ரம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி, ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் என்று பலரும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். அதிலும் குறிப்பாக அதிதி சங்கர் தன்னுடைய முதல் படம் வெளிய ஆவதற்கு முன்பாகவே அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார் . இதனால் பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் Nepotism தாக்கம் ஆரம்பித்துவிட்டது என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தற்போது இந்த Nepotism பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார் இளைய தளபதி விஜயின் மகன் சஞ்சய்.தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=fRITNHfWWNM&t=36s

ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன், சிரி, 'Pull The Trigger' என்ற சில குறும்படங்களை இயக்கி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியது.

இப்படி ஒரு நிலையில் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி இருப்பதை பார்க்கும் போது தானும் இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக விஷால் கூறியுள்ளார். இதுகுறித்து பேசி இருக்கும் அவர் 'ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள். எனக்குள் இருக்கும் இயக்குனரை சஞ்சய் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் நானும் இயக்குனராக வேண்டும் என்று கடந்த 25 வருடங்களாக ஒரு கனவாக வைத்திருந்தேன்.

நேற்று இந்த அறிவிப்பை பார்க்கும் போது மறுபடியும் நாம் இயக்குனர் ஆக வேண்டும் பசங்க எல்லாம் இயக்குனர் ஆகிட்டு இருக்காங்க நாம மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று ஜேசன் சஞ்சய் என்னை ஊக்கி வைத்திருக்கிறார்' என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full