நிச்சயம் வரை சென்று நின்ற திருமணம், பெற்றோர்கள் சம்மதத்துடன் முன்னாள் காதலியையே மணக்கும் விஷால்.

By Rajkumar · 9/8/2023

பிரபல நடிகையை விஷால் திருமணம் செய்ய இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் தான் இவர். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகாது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே விஷாலுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள். இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சர்ச்சையாகவே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால் அவர்கள் அணிசா என்பவரை காதலித்திருந்தார்.

விஷால் நிச்சயதார்த்தம்:

பின் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. இது குறித்து பலருமே கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஷாலும் சரியாக பதில் தரவில்லை. பின் விஷாலுக்கும் நடிகை லட்சுமிமேனன் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து இருந்தது. விஷால்- லட்சுமிமேனன் இருவருமே இணைந்து பாண்டிய நாடு என்ற படத்தில் நடித்திருந்தார்கள்.

விஷால் காதல் கிசுகிசு:

அதன் பின் சிகப்பு மனிதன் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். ஆனால், இருவருமே இதைப் பற்றி எதுவும் பேசவில்லை, பின் விஷால், வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக கூறியிருந்தார்கள். ஆனால், இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அதற்குப்பின் விஷால் குறித்து எந்த ஒரு காதல் கிசு கிசுவும் சோசியல் மீடியாவில் வெளியாகவில்லை.

விஷால் திருமணம்:

இந்த நிலையில் நடிகர் விஷால் நடிகை ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, ஏற்கனவே லட்சுமி மேனன்- விஷால் இருவருக்கும் மத்தியில் காதல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு இருந்தது. தற்போது விஷால்- லட்சுமிமேனன்இருவீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. உண்மையாலுமே விஷால்- லட்சுமிமேனன் இருவருக்கும் திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

விஷால் திரைப்பயணம்:

மேலும், சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர்களுடன் இந்த பட்டத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full