தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையே மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டு வருகிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த புயலால் அதிக இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையில் பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டினுள்ளர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது.

Advertisement

அதோடு புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் எல்லாம் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருந்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது.இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நிறைய இடங்களில் நிவாரண முகாமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் சென்னை மாநகராட்சியையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘வணக்கம். புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. 

Advertisement

அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015-ம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Advertisement

அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும். என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் உள்ளனர். இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்’ என்று பதிவிட்டு மேயர் பிரியா, சென்னை கார்ப் ரேஷன், ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அகியோரை டேக் செய்து இருக்கிறார்.

Advertisement