நாங்க ரெடி ஆரம்பிக்கலாமா? விஷாலுடன் மோதும் ராகவா லாரன்ஸ்- உற்சாகத்தில் ரசிகர்கள்

By subhashini · 5/7/2023

நடிகர் விஷாலுடன் ராகவா லாரன்ஸ் மோத இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மார்க் ஆண்டனி படம்:

அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படம் குறித்த தகவல்:

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் இந்த பட்டத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து வருகின்றனர்கள். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் லாரி ஓன்று கட்டுப்பாட்டை மீறி வேகமாக வந்து செட்டில் மோதுகிறது. அந்த மோதலின் போது அங்கு பல சினிமா தொழிலாளர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் இருந்தனர். ஆனால், இந்த விபத்தில் வந்து அதிர்ஷ்டவசமாக அடிபடவில்லை. இந்த செய்தி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது.

விஷால் படம் ரிலீஸ் தேதி:

மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் எல்லாம் வெளியாகி இருந்தது.
தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் உடன் ரகவா லாரன்ஸ் மோத இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி:

ஆனால், விநாயகர் சதுர்த்தி அன்று நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு வாசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் சந்திரமுகி 2 படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. ஆகவே, விநாயக சதுர்த்தி அன்று விஷால்- ராகவா லாரன்ஸின் படங்கள் மோதிக்கொள்ள இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full