நடிகர் விஷாலுக்கு திருமணம்..!பெண் யார் தெரியுமா..!அப்போ வரலக்ஷ்மி கதி ?

By Rajkumar · 31/12/2018

தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக பிரபல விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் செய்திகள் வெளியாயின.நடிகை வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று சமீபத்தில் அதை மறுத்திருந்தார்.

மேலும், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். நடிகர் சங்க கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஷாலுக்கு பெண் பார்க்கும் முயற்சியில் அவர் பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். இப்போது ஆந்திராவைச் சேர்ந்த மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. அதன் பிறகு திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். இந்த தகவலை விஷாலின் தந்தை ஜி கி ரெட்டி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், விஷாலின் திருமணம் சங்க கட்டிடத்தில் நடந்தாலும் ஆச்சர்யமில்லை.



Tamil Behind Talkies AMP · Quick view
View full