விஷால் திருமணம் நின்று போனதா.! வருங்கால மனைவி செய்த செயலால் சந்தேகம்.!

By Rajkumar · 26/8/2019

தமிழில் செல்லமே தொடங்கி சண்டக்கோழி இரும்புத்திரை என பல்வேறு படங்களில் நடித்தவர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார் விஷால்.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபரரின் மகள் அனிஷா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை தொடர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தமும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது விஷால் திருமணம் நின்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். ஆனால், விஷால் எந்த புகைப்படத்தையும் நீக்கவில்லை. மேலும், விஷாலும் இது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full