விஜய் ஆண்டனி கான்சர்டில் செம வைப் ஆன விஷால், வைரலாகும் வீடியோக்கள் இதோ

By krithika · 19/1/2025

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் நடிகர் விஷால் ஆடிப்பாடி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோ பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது.

மதகஜராஜா படம் :

அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது. அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கைகள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருந்தார்கள். பின், விஷாலுக்கு சாதாரண வைரல் காய்ச்சல் தான் என்று அவர் தரப்பில் கூறி இருந்தார்கள்.

படம் குறித்த தகவல் :

தற்போது விஷால் நன்றாக இருக்கிறார். மேலும், பொங்கலை முன்னிட்டு இப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படம் நல்ல வசூல் வேட்டையும் செய்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் இசையில் விஷால் பாடியுள்ள 'மை டியர் லவ்வரு' பாடல் மக்களிடையே பயங்கர வைப்பை ஏற்றிருக்கிறது.

மதகஜராஜா வெற்றி விழா:

மேலும், சமீபத்தில் நடந்த இந்த படத்தின் வெற்றி விழாவில் கூட விஷால், என்னுடைய முதல் இசை நிகழ்ச்சியில் என்னுடைய பாட்டை கேட்பதற்கு கிட்டத்தட்ட 40,000 பேர் வராங்கன்னு கேள்விப்பட்டேன். விஜய் ஆண்டனிக்கு பெருமை செலுத்துவது நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். விஜய் ஆண்டனி எத்தனையோ இசை நிகழ்ச்சி நடத்தி இருக்காரு. ஆனால், நான் பாடப்போகும் இந்த இசை நிகழ்ச்சி வேற லெவல்ல இருக்கும்னு நினைக்கிறேன். அங்கு இருக்கிற கல்லை எல்லாம் பொறுக்கி போட சொல்லிட்டேன்.

விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சியில் விஷால் :

நமக்கு சேஃப்டி தான் முக்கியம் என்றவாறு பேசியிருந்தார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ' லைவ் கான்சர்ட்' நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் விஷால் கலந்து கொண்டார். மேலும், அந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடியபடி, ஆடலும் பாடி உற்சாகத்துடன் விஷால் காணப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம் பழையவிஷாலைபார்க்க முடிகிறது என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full