சீக்கிரத்தில் டும் டும் டும், வெட்கத்துடன் திருமணத்தை பற்றி போட்டு உடைத்த நடிகர் விஷால் - வைரலாகும் வீடியோ
நடிகர் விஷாலுக்கு திருமணம் நடக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார்.
அதோடு தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். தற்போது விஷால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஷால்- சுந்தர்.சி கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.
விஷால் திரைப்பயணம்:
இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2012 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது. மேலும், மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றது.
விஷால் குறித்த தகவல்:
இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி இதை சென்னையில் நடைபெற்றது. தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படி இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 40 வயதாகியும் முரட்டு சிங்கிளாகவே விஷால் இருக்கிறார். அதோடு நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் விஷால் என்று கூறியிருந்தார்.
விஷால் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஷாலுக்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ஆகி வருகிறது. இது தொடர்பாக அளித்த பேட்டியில் விஷால், நடிகர் சங்க கட்டிடம் தான் என்னுடைய கனவு. அதை கட்டி முடித்த பின்பு திருமணம் செய்வேன் என்று அறிவித்தேன். அதை ஒரு சவாலாகவும் எடுத்துக் கொண்டுதான் செயல்பட்டேன். முதலில் வெறும் மூன்று ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டிடம் முடித்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், 9 ஆண்டுகள் வந்துவிட்டது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க இருக்கிறோம்.
https://www.youtube.com/watch?app=desktop&v=iW6i_1onmZ4
திருமணம் பற்றி சொன்னது:
அநேகமாக அடுத்த நான்கு மாதங்களில் என்னுடைய திருமணம் நடப்பதும் உறுதி. என்னுடைய பிறந்த நாளில் கூட திருமணம் நடக்கும். பெண் எல்லாம் பார்த்து முடித்து பேசி விட்டோம். இது முழுக்க முழுக்க காதல் திருமணம் தான். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். ஆனால், அந்த பெண் யார் என்பதை கூடிய விரைவிலேயே சொல்கிறேன் என்று வெட்கத்துடன் கூடியிருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விஷால் ரசிகர்கள் குஷியில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.